இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதிரை பேருந்து நிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, ஆஸ்பத்திரி சாலை, பெரிய கடைத்தெரு, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.
இந்நிலையில், அதிரை பேருந்து நிலையத்தில் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உட்பட அனைத்துக்கட்சியினர் அரசுப் பேருந்தை மறித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம், வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும், விவசாயக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன்,
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.எம். முஹம்மது முகைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலாளர் என். காளிதாஸ் ஆகியோர் தலைமையில் கட்சியினர் 190 பேர் கலந்துகொண்டு பேருந்து மறியலில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானோரை போலீசார் கைது செய்து செல்லியம்மன் சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர். இன்று மாலை அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைகளை மூடச் சொன்னார்கள் எந்தச் சேனலாவது மூடப்பட்டதா? மூடினால் அவன் புலம்பில் மண்ணு விழும்., பந்த் நடத்தியதில் அன்னடக்காட்சிகளுக்கு நஷ்டம்., அரசியல்வாதிகளுக்கு அடையாள படுத்திக்கொள்ள நேரம்; விவசாயி பிரச்னை திமுக ஆட்சியிலே சரி செய்ய முடியாதது எதிர்க்கட்சியாக இருக்கும்போது நடக்குமா?
ReplyDelete