இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 சட்டப் பிரிவு 12(1)(சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவிகித ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்கள் கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.
எதிர்வரும் 2017-2018ம் கல்வியாண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 261 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிக் / மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி / 1ம் வகுப்பு) வகுப்பில் 25 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் 4125 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் வெற்றிகரமான பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறும் செய்தியாக அளிக்கப்படும்.
முதன்மைக் கல்வி அலுவலர்ஃமாவட்ட கல்வி அலுவலர் / மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர் / மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் / வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு இசேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர் / எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் /துப்புரவு தொழிலாளியின் குழந்தை / மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.
ஏப்ரல் 20.04.2017ம் தேதி முதல் மே 18.05.2017ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் பொது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.திருவளர்ச்செல்வி, மாவட்ட தொடக்கக் கல்வி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.