.

Pages

Sunday, April 23, 2017

அதிராம்பட்டினத்தில் வரிமட்டி சீசன் தொடக்கம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடலோரப்பகுதிகளில் வரிமட்டி சீசன் துவங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நத்தை இனத்தை சேர்ந்த மட்டி இனமாகிய இவற்றை வரி மட்டி, வாழி மட்டி, வழுக்கு மட்டிகள் என பலவகைகள் உண்டு.

அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடலோர கிராமப் பகுதிகளில் வசிக்கும் மீனவப் பெண்கள் தினந்தோறும் காலை நேரங்களில் மட்டிகளை வாங்கி அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். மட்டியின் சதைப்பகுதியை வறுத்தும், அவியல் செய்தும் உண்பார்கள், வரிமட்டியைக்கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணி சுவையாகக் இருக்கும். ஒரு மரக்கால் அளவில் ரூ.50- க்கு விற்கின்றனர். இவ்வியாபாரத்தில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து சீசன் நேரத்தில் விற்பனை செய்துவரும் ஆண்டாலு கூறுகையில்...
'வரிமட்டி ஏரிப்புறக்கரை கடலோரப் பகுதியில் அதிகளவில் பிடிபடுகின்றன. பலவித மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக மூலச்சூட்டிற்கு ஏற்றது. வலை போட்டு இதை பிடிக்க முடியாது. சேற்றில் புதைந்து வாழும் தன்மை கொண்ட மட்டியை மீனவர்கள் அரிவலை கொண்டு குறைந்த ஆழம் உள்ள தண்ணீரில் மூழ்கிதான் பிடிக்கின்றனர். இதன் ஓடுகள் அழகு சாதனப் பொருட்கள், வர்ணம் பூச்சுகள் தயாரிக்க பயன்படுகிறது. வரிமட்டியின் ஓடு கிலோ ரூ. 50 வரை விற்கப்படுகிறது. இம்மாட்டி ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை பிடிபடும்' என்றார்.
 
 
 

3 comments:

  1. மட்டி விற்பனை சட்டபடி தடை செய்யப்பட்டவை இது குறித்த பதிவுகள் தவிர்ப்பது நல்லது

    ReplyDelete
  2. விற்ப்ப தர்க்கு தடையா? அல்லது சாப்பிடுவதற்கு தடையா?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.