.

Pages

Saturday, April 15, 2017

அதிரையில் TNTJ கிளை-2 சார்பில் கோடைகாலப் பயிற்சி முகாம் !

அதிராம்பட்டினம், ஏப்-15
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை 2 சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு சிஎம்பி லேன் மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிளைத் தலைவர் பஜால் முகமது தலைமை வகித்தார். அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியகம் முதல்வர் அஸ்ரப்தீன் ஃபிர்தெளஸி முன்னிலை வகித்தார்.

கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் கிளை-2 சார்பில் பெண்களுக்கு கோடை காலப் பயிற்சி முகாம் எதிர்வரும் 20-4-2017 முதல் 15-5-2017 வரை தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 5 வரை, புதுமனைத்தெரு அல்- ஹிக்மா மதரஸாவில் நடத்துவது எனவும், மாணவிகளை பயிற்சி வகுப்பிற்கு அழைத்து வர இலவச வாகன வசதி ஏற்படுத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் பயிற்சி வகுப்பு நிறைவில் மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு இதில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.