.

Pages

Thursday, April 27, 2017

துபாயில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் பெட்ரோல் பங்க் திறப்பு !

அதிரை நியூஸ்: ஏப்-27
துபை ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இரட்டை நகரங்களான இன்டர்நெட் சிட்டி மற்றும் மீடியா சிட்டி அருகில் முற்றிலும் சூரிய ஒளி (சோலர்) மின்சக்தியில் இயங்கும் பெட்ரோல் பங்க் ENOC எனும் துபை அரசு நிறுவனத்தால் திறக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டுள்ள மின்தகடுகள் மூலம் மணிக்கு 120 கிலோவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது அந்த பெட்ரோல் பங்கின் தேவையை விட 30 மடங்கு கூடுதலாகும். இந்த கூடுதல் மின்சக்தி துபை அரசின் மின்சார வாரியத்திற்கு (Dubai City's Power Grid) வழங்கப்படுகிறது.

துபையில் மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள் அதிகரித்து வரும் வேளையில் துபை போக்குவரத்து துறை முற்றிலும் மின்சக்தியில் இயங்கும் டெஸ்லா வகை டேக்ஸிக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாலும் மின்சார சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதால் இதுபோல் மேலும் பல பெட்ரோல் ஸ்டேஷன்களில் சோலார் பேனல் எனும் சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி செய்யப்படவுள்ளன.

துபையில் 30க்கு மேற்பட்ட நிலையங்களுடனும் 6,000க்கு மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்படுகிறது Enoc நிறுவனம். உலகின் மிகப்பெரும் சூரிய ஒளி பெட்ரோல் பங்க் அமெரிக்காவின் மத்திய ஓஹியோ மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.