![]() |
மாணவன் முஹம்மது சுஹைல் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவை சேர்ந்தவர் கே.எஸ்.ஏ ஹாஜா சரீப். இவர் சிங்கப்பூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது சுஹைல் ( வயது 17 ). ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளியில் உயர்கல்வி பயிலும் மாணவன்.
இந்நிலையில், சொற்சிலம்பம்-2017 விருதிற்கான விவாதப் போட்டி சிங்கப்பூர் மீடியா கார்ப் அரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 'சிங்கப்பூர், உலகத் தரத்திற்கு ஏற்ற வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளது' என்ற தலைப்பில் பேசிய ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி மாணவர்கள் சிங்கப்பூரில் கிடைக்கும் உணவு, உடை ஆகிய அடிப்படை வசதிகளைப் பட்டியலிட்டதுடன் வளங்கள் அற்ற சிங்கப்பூர் ஐம்பது ஆண்டுகளில் கண்ட பெரும் வளர்ச்சியை எடுத்துரைத்தனர்.
'வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் இன்னும் உலகத் தரத்தை எட்டவில்லை’ என்ற தலைப்பில், ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். விவாத முடிவில் ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி அணியின் ஹர்ஷிதா ஸ்ரீநிவாசன், அதிரை ஹாஜா ஷரீஃப் மகன் முகமது சுஹைல், ஷஃபானா அஃபிஃபா, சஹானா பாலசுப்ரமணியம், முகமது நவீத் ஜீவா ஆகியோரைக் கொண்ட அணியினர் வெற்றி பெற்று விருதினை தட்டிச்சென்றனர். பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்து தந்திருக்கும் மாணவன் முகமது சுஹைலை பெற்றோர்- உறவினர்கள், நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி உதவி: தமிழ்முரசு ( சிங்கப்பூர்)
தகவல்: அதிரை 'ஹனி' ஷேக்
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅஜ்மீர் ஏஜென்ஸிஸ், அதிராம்பட்டினம்
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅஜ்மீர் ஏஜென்ஸிஸ், அதிராம்பட்டினம்
வாழ்த்துகள் 14 வது வார்டு முன்னால் கவுன்சிலர் NKS மு.முகம்மது சரிப்
ReplyDelete