.

Pages

Wednesday, April 26, 2017

சவூதியிலிருந்து வெளியேற இன்னும் 62 நாட்களே எஞ்சியுள்ளன

அதிரை நியூஸ்: ஏப்-26
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக 90 நாட்களுக்கான பொதுமன்னிப்பு காலம் ரஜப் 1 ஆம் தேதி (மே 29) முதல் துவங்கி ரமலான் 29 ஆம் தேதியுடன் (ஜூன் 24) நிறைவடையவுள்ள நிலையில் ஏராளமான வெளிநாட்டவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி வெளியேறி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவுவதற்காக நாடு முழுவதும் 78 சேவை முகாம்களை சவுதி ஜவாஸத் எனும் இமிக்கிரேசன் துறை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிக அதிகமாக 16 மையங்கள், மக்காவில் 12 மையங்கள், ரியாத் நகரில் 10 மையங்கள், தபூக்கில் 6, நஜ்ரானில் 5, மதினாவில் 4 எஞ்சியவை நாட்டின் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் அதிகமானோர் ஜித்தா விமான நிலையம் வழியாகவும், தாயிப் விமான நிலையம் மற்றும் ஜித்தா கப்பல் துறைமுகம் வழியாகவும் அதிகமானோர் வெளியேறி வருகின்றனர் எனவும் ஜவாஸத் தெரிவித்துள்ளது.

ஹஜ், உம்ரா விசாவில் வந்தவர்கள் நேரடியாக டிக்கெட் எடுத்துக் கொண்டு வெளியேறலாம். வேலைவாய்ப்பு விசாவில் வந்திருந்தாலும் பாஸ்போர்டில் ஸ்டாம்ப் அடிக்காதவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தும், பாஸ்போர்டில் ஸ்டாம்ப் அடித்தப்பின் கம்பெனியை விட்டு ஓடியவர்கள் மற்றும் பிற வகையினர் மட்டும் இத்தகைய சேவை மையங்களுக்கு சென்று எக்ஸிட் விசா அடித்துக் கொண்டு முறைப்படி வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தவிர பிறர் மீண்டும் முறைப்படியான விசாவுடன் சவுதிக்குள் வர தடை செய்யப்படமாட்டார்கள்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.