.

Pages

Thursday, April 27, 2017

ஆதார் கார்டு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு !

கோப்புப்படம்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டத்தில்
உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள
விவரங்களை திருத்தம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால், இம்மையங்களுக்குச் சென்று கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை, மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

அதற்கான சேவை கட்டண விவரம் பின்வருமாறு:
ஆதார் பதிவு செய்வதற்கு கட்டணமில்லை. 5 வயது மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்வதற்கு கட்டணமில்லை.   நிலைப்புள்ளி விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம் முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) திருத்தம் செய்வதற்கு ரூ.25ம், புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25ம், ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக்கொள்வதற்கு ரூ.10 என சேவைக் கட்டணம் செலுத்தி மேற்கண்ட நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளிரிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்ளவும்.

சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டுமெனில் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 2911-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.