அதிரை நியூஸ்: ஏப்-25
நேற்று நமதூர் அதிரையில் 1 நாள் முழுவதும் மாதாந்திர பாராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு மக்கள் வழமையாக அவதியுற்றனர், இதுபோல் மின்தடையால் மக்கள் துன்புறுவதற்கும் வேறு வழியின்றி பழகிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். ஆனால் மின்தடை என்றால் என்னவென்றே அறியாத ஒரு தேசத்தில் ஏற்படும் சில நிமிட மின்தடைகள் கூட ஆச்சரிய செய்தியாக பேசப்படும்.
உலகின் பெரிய மால்களில் ஒன்றான துபை மால் சுமார் 1000 பலதரப்பட்ட வணிக நிறுவனங்களுடனும் தினமும் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகையுடன் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் ஒன்றாகும்.
இங்கு நேற்றிரவு சுமார் 7.13 மணியளவில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் வியாபாரத்தை நிறுத்திவிட்டு அனைத்து கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் வெளியேற நேரிட்டது. சில அவசரகால விளக்குகள் மற்றும் மொபைல் போன் டார்ச் வெளிச்சம் மட்டுமே அங்கு ஒளி வழங்கும் சாதனமாக திகழ்ந்தது. லிப்டுகள் மற்றும் எஸ்கலேட்டர் போன்றவை அவசரகால மாற்று மின்சக்தி மூலம் இயக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
துபை மின்துறை ஊழியர்கள், துபை தீயணைப்புத் துறை, துபை ஆம்புலன்ஸ் கார்ப்பரேசன், துபை போலீஸ் போன்றோர் ஒன்றிணைந்து நிலமையை கட்டுப்படுத்தி ஒரு வழியாக இரவு 8.47 மணியளவில் மீண்டும் மின்சாரம் கிடைக்கச் செய்தனர். இந்த திடீர் மின்தடையால் சுமார் 90 நிமிடங்கள் அப்பகுதி மிகவும் பரபரப்பாக இருந்தது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக அதாவது கடந்த வாரம் ஏப்ரல் 17 அன்றும் இதன் எதிர்ப்புறமான புரூஜ் கலீபா பகுதியில் அமைந்துள்ள 'தி லாப்ட்ஸ் டவர்ஸ்' எனும் கட்டிடத்திலும் இதுபோல் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் சரியான சூடும், வெக்கையும், ஆறாக வியர்வையும் கலந்து கட்டி வெளுத்த ஒரு பகல் பொழுதில் துபை முழுவதும் மின் தடை ஏற்பட்டது. குளு குளு அறையில் இருந்து பழகிய மக்கள் மட்டுமல்ல உயர் அதிகாரிகள் வரை சாலையில் இறங்கி போக்குவரத்தையும் சட்டம் ஒழுங்கையும் வியர்வையில் குளித்தவாறு மேற்கொண்டனர் என்ற நினைவலையை இளையவர்களுக்கு நினைவூட்டுகின்றோம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.