.

Pages

Thursday, May 31, 2018

தஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர ~ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறன்றன.
               
தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விணணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (Prospectus) தரப்பட்டுள்ளன.
                 
28.05.2018 முதல் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் விளக்க கையேட்டினை மாணவர்கள் பார்வையிடலாம். மாணவர்கள், இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துக்கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம்  தரப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரலின் படி மாணவர்கள் Single Window முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவச பயிற்சி!

தஞ்சாவூர் மாவட்டத்தில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள கயறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் மூலம் கயிறு உற்பத்தி தொடர்பான 6 மாத கால உதவித் தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சி வருகின்ற  01.07.2018  முதல் துவங்கப்பட உள்ளது.

மேலும் இப்பயிற்சி வகுப்பில் சேருவதற்கு 18 முதல் 45 வயதிற்கு உட்பட்;ட எழுத படிக்க தெரிந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் பயிற்சியின்போது மாதம் ரூ.3000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள்  மண்டல கயிறு வாரியம், பிள்ளையார்பட்டி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தினை www.coirboard.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்காணும் பயிற்சிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள்  அலுவலக பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், வல்லம் வழி, பிள்ளையார்பட்டி அஞ்சல், தஞ்சாவூர் -613403 என்ற முகவரிக்கு 22.06.2018 க்குள் வந்து சேரவேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 04362-264655-ஐ தொடர்பு கொள்ளவும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் பயனாளிகள் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தேதி ஒத்திவைப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 09.06.2018 அன்று நடைபெறவிருந்த இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் எதிர்வரும் 21.07.2018 அன்று மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 09.06.2018 முதல் 17.06.2018 வரை நடைபெறவிருந்த இந்திய விமான படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் எதிர்வரும் 21.07.2018 முதல் 29.07.2018 வரை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.  விமானப் படை ஆட்கள் தேர்வு முகாம் தொடர்பான விரிவான அறிவிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கண் பரிசோதனை முகாம்!

பேராவூரணி மே.31-
தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில், பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமையில், புதன்கிழமை அன்று கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

டாக்டர் கோகிலா முன்னிலை வகித்தார். கண் பரிசோதகர் திரவியம் கண் நோயாளிகளை பரிசோதனை செய்தார். முகாமில்  67 நபர்கள் சிகிச்சை பெற்றனர். இதில் 25 நபர்களுக்கு கண்புரை இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு, நவீன பேக்கோ முறையிலான கண் அறுவை சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு இராஜாமிராசுதார் கண் மருத்துவமனைக்குஅனுப்பி
வைக்கப்பட்டனர். புற நோயாளிகளுக்கு கண் சொட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் மருந்தாளுனர் சரவணன், செவிலியர்கள் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டானோ தீவிற்கு சுயாட்சி அதிகாரம்!

அதிரை நியூஸ்: மே 31
முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவிற்கு சுயாட்சி அதிகாரம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக வாழும் தீவுப்பகுதி மிண்டானோ (Mindanao) .இந்தத் தீவின் அளவு தென் கொரியா நாட்டின் நிலப்பரப்பிற்கு ஈடானாதாகும். இந்தத் தீவு நிக்கல் (உலோகம்) சுரங்கங்கள் (Nickel Mines) உள்ளிட்ட ஏராளமான கனிம வளங்களும், பழப் பண்ணைகளும், பெருமளவிலான விவசாயத்திற்கு ஏற்ற உபரி நிலங்களும் நிறைந்த பகுதியாகும் என்றாலும் இங்கு நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் பிலிப்பைன்ஸிலேயே மிகவும் ஏழ்மையான பகுதியாகவும், தொழில் வளர்ச்சியற்ற பகுதியாகவும் இருந்து வந்தது.

இங்கு கடந்த சுமார் 50 ஆண்டுகளாக சுதந்திரம் கேட்டு நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் சுமார் 120,000 பேர்கள் கொல்லப்பட்டும், சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக செல்லும் நிலையும் ஏற்பட்டது. இந்த பிராந்தியத்தின் கவர்னராக சுமார் 22 ஆண்டுகள் இருந்தவர் தான் இன்றைய பிலிப்பைன்ஸ் அதிபர் டுயார்ட்டே.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த பல்வேறுகட்ட முயற்சிகளின் விளைவாக தற்போது மிண்டானோ பிராந்தியத்திற்கு சுயாட்சி வழங்க அதிபர் டுயார்டேயின் முயற்சியின் விளைவாக அந்நாட்டு நாடாளுமன்ற கீழ்சபையில் 227 உறுப்பினர்களின் ஆதரவுடன் சுயாட்சி வழங்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது, எதிர்ப்பு 11 பேர், அவைக்கு வராதவர்கள் 2 பேர் மட்டுமே. இனி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபரின் இறுதி ஓப்புதலுக்கு அனுப்பப்படும்.

எனினும் சுயாட்சி வழங்கப்படும் மிண்டானோ தீவு பிராந்தியத்தின் ராணுவம் (Defense), உள்நாட்டு பாதுகாப்பு (security), வெளியுறவு (Foreign Affairs) மற்றும் பண விவகாரங்கள் (Monetary Policy) அனைத்தும் வழமைபோல் பிலிப்பைன்ஸ் மத்திய அரசின் கையில் நீடிக்கும். இது தொடர்பாக மிண்டானோ போராளிகள் குழுவிற்கும் பிலிப்பைன்ஸ் அரசிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்கிற சட்டமே கீழ்சபையில் ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

சவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்தால் 6 மாதம் சிறை அபராதம்!

அதிரை நியூஸ்: மே 31
உம்ரா விசாவில் வரும் யாத்ரீகர்கள் உம்ரா விசாவில் நாட்டிற்குள் தங்க அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் காலாவதியான விசாவுடன் சவுதியில் தங்கியிருந்தால் 6 மாத சிறை தண்டனையுடன் 50,000 ரியால் அபராதமும் விதிக்கப்படும் என சவுதி ஜவாஜாத் (Jawazat) எனப்படும் இமிக்கிரேசன் துறை அறிவித்துள்ளது.

அதேபோல் உம்ரா விசாவில் வந்தவர்கள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களை தவிர சவுதியின் பிற இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்றும், கலாவதியான உம்ரா விசாவில் உள்ளவர்களுக்கு தங்குமிடம் அளித்தல், வாகனங்களில் அழைத்துச் செல்லுதல், வேலைவாய்ப்புக்களை தருதல் மற்றும் மறைத்து வைத்தல் ஆகியவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் எச்சரித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

முத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது!

முத்துப்பேட்டை, மே 31
முத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் ரூ.4 ஆயிரம் பணத்துடன் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்து உதயமார்த்தாண்டபுரம் ஆக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (54) இவரது வீட்டின் அருகே பாதைக்காக பட்டுக்கோட்டையை சேர்ந்த வேம்பையன் என்பவரிடமிருந்து 1.5 சென்ட் இடம் வாங்கினார். இதனை பத்திரப்பதிவு செய்வதற்காக முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். அப்போது, அக்கு பணியில் இருந்த சார் பதிவாளர் உதயகுமார் பத்திரப்பதிவுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் அளவுக்கு தன்னிடம் வசதியில்லை என்று கூறியதால், ரூ.4 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே இடத்தை பதிவு செய்துதர முடியும் என்று கூறியுள்ளார்.

ஆனால்,  லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலசுப்பிரமணியன், இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை போலீசார் கூறியது போல் மாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உதயகுமாரிடம் கொடுத்தார். அப்போது,  அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி காந்திமதி நாதன, இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், அருள்பிரியா தலைமையிலான போலீசார் அலுவலகத்திற்குள் புகுந்து லஞ்சமாக பெற்ற ரூ.4 ஆயிரம் பணத்துடன் உதயகுமாரை கைது செய்தனர்.

மேலும், அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணமும் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன்படி, முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை துவங்கிய சோதனை இரவு 10 மணிக்கும் மேலாக நீடித்தது. முத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 31
சவுதி, ஜித்தா மாநகரில் MEPCO கல்வி மேம்பாட்டு குழுமம் சார்பாக இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாணவி ஹில்மியா கிராத் ஓதி தொடங்கி வைத்தார். லியாகத் அலி கான் வரவேற்றுப் பேசினார். நூருல் அமீன் குழுமத்தின் நோக்கம் மற்றும் முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார்.

மன்னர் அப்துல் அஜிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜுபைர் 'உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு' என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். மவ்லவி மீரான் தாவூத் 'பித்ரா, ஜகாத் தொடர்பாக சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியினை மஹ்பூப் பாஷா தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஜித்தா வாழ் சமூக ஆர்வல அமைப்புகளின் பொறுப்பாளர்கள், அதிராம்பட்டினம் அஜ்வா நெய்னா, அகமது அஸ்லம், தாஜுதீன். மீராஷா ராபியா மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில்  ஹாஜா முகைதீன் நன்றி கூறினார். பின்னர், துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டு, இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wednesday, May 30, 2018

பட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!

File Image
பட்டுக்கோட்டை, மே 30
பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.அண்ணாதுரை தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் காசிநாதன், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆத்திக்கோட்டை, நாட்டுச்சாலை ஆகிய ஊர்களில் உள்ள கடைவீதியில் திடீர் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டதை அடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதவிர, 14 வயதுக்குள்பட்டவர்களுக்கு புகையிலை பொருள்களை விற்பனை செய்வதில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்காதது மற்றும் விதிமுறைகளை மீறியதாக 9 கடைகாரர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ. 1,100 வசூலிக்கப்பட்டது.

மேலும், 2-வது முறையாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.

உருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)

ஒரத்தநாடு, மே 30
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 3 கல்வி மாவட்டங்கள் உள்ள நிலையில் இப்போது புதிதாக ஒரத்தநாடு கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இப்போது தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 3 வட்டாரங்களும் (ஒன்றியங்கள்), பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 6 வட்டாரங்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 5 வட்டாரங்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போது பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, திருவோணம் வட்டாரங்கள், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வட்டாரம் ஆகியவற்றை இணைத்து ஒரத்தநாடு கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் ஒரத்தநாட்டில் அமைக்கப்படுகிறது.

இதற்கான அரசாணை திங்கள்கிழமை (மே 28) பிறப்பிக்கப்பட்டது.  எனவே, வருகிற கல்வியாண்டு தொடக்கமான ஜூன் 1-ம் தேதி முதல் ஒரத்தநாடு கல்வி மாவட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. தற்போது, தொடக்க, நடுநிலை அளவில் ஒரத்தநாடு வட்டாரத்தில் 130 பள்ளிகளும், அம்மாபேட்டை வட்டாரத்தில் 86 பள்ளிகளும், திருவோணம் வட்டாரத்தில் 79 பள்ளிகளும் என மொத்தம் 295 பள்ளிகள் உள்ளன. இதேபோல, மூன்று வட்டாரங்களிலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்த்தால் ஏறத்தாழ 400 பள்ளிகள் இருக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் பிறகு பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய வட்டாரங்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களும், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் ஆகிய வட்டாரங்களும் இடம்பெறும்.

அதேசமயம், மாவட்டத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகமும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகமும் கலைக்கப்படுகிறது.
இதுவரை பள்ளிக் கல்வித் துறையில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும், மெட்ரிக் பள்ளிகளை ஆய்வாளரும் கவனித்து வந்தனர்.

இவையெல்லாம் அண்மையில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அலகாக மாற்றப்பட்டது. இவை அனைத்தும் முதன்மைக் கல்வி அலுவலரின் அதிகாரத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேபோல, மாவட்டக் கல்வி அளவில் அனைத்து வகைப் பள்ளிகளும் மாவட்டக் கல்வி அலுவலரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளையும் திறம்பட ஆய்வு செய்யவும், அரசின் நலத்திட்டங்களை அனைத்து மாணவ, மாணவிகளுக்குக் கொண்டு சேர்க்கவும், ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்வாக மாற்றம் காரணமாக மாநில அளவில் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, புதிதாக 52 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல் 652 பேர் ~ 90.29 % தேர்ச்சி (முழுவிவரம்)

அதிரை நியூஸ்: மே 30
தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 7-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந் தேதி வரை நடந்தது. இதைத் தொடர்ந்து பிளஸ்-1 தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. அதன் படி தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்ச்சி சதவீதம் தஞ்சையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 12 ஆயிரத்து 889 மாணர்களும், 16 ஆயிரத்து 241 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 130 மாணவர்கள் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 897 மாணவர்களும், 15 ஆயிரத்து 405 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 302 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனால் 85.54 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியும், 94.85 சதவீதம் மாணவிகள் தேர்ச்சியும் பதிவாகி உள்ளது. மொத்தம் தஞ்சை மாவட்டம் 90.29 சதவீதம் பெற்று மாநிலத்தில் 25-வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் மதிப்பெண்கள் 500 க்கும் மேல் 652 பேர் பெற்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்!

அதிரை நியூஸ்: மே 30
அமீரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 வருட தங்குமிட விசா உட்பட பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது இதேபோன்றதொரு 10 வருட விசா திட்டத்தை பஹ்ரைனும் கையிலெடுத்துள்ளது.

பஹ்ரைனில் தொழில்துறைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதுப்பிக்கத்தக்க 10 வருட தங்குமிட விசாவை வழங்கிட ஏதுவான சட்டங்களை வடிவமைக்குமாறு பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் பஹ்ரைனின் எதிர்நோக்கு வளர்ச்சித் திட்டம் 2030 (Vision 2030) என்ற இலக்கில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் பஹ்ரைனை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு தொழில்துறை நாடாக மாற்ற முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

ஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உயர்வு!

அதிரை நியூஸ்: மே 30
ஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியாலாக உயர்ந்தது

புனித ஹஜ்ஜின் போது புனித மக்கா நகரை சுற்றியுள்ள புனிதத்தலங்களுக்கு செல்வதற்காக மஷாயர் எனப்படும் மெட்ரோ ரயில்கள் (Mashaer train) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் யாத்ரீகர்கள் பயணம் செய்வதற்கு 250 ரியால்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது 400 ரியால்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஹஜ் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இப்புதிய கட்டணங்களையே ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் ஹஜ் காலத்தின் போது மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்பந்தம் செய்துள்ள புதிய நிறுவனத்தால் ஏற்றப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது, இந்த புதிய நிறுவனத்தை மாநகராட்சி மற்றும் நகர அலுவல்களுக்கான அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

இதற்கிடையில், ஹஜ் முயாஸர் Haj Muyasar (easy pilgrimage) எனப்படும் ஹஜ் சேவையை 3,465 ரியால்கள் கட்டணத்தில் உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழங்க 20 சவுதி கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த கட்டண ஹஜ் சேவையை வழங்க 57 சவுதி கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் சுமார் 6,500 உள்நாட்டு யாத்ரீகர்கள் பயனடைவர்.

இந்த யாத்ரீகர்கள் ஒவ்வொருவருக்கும் அனுமதி பெற்ற தங்குமிடங்களில் மக்காவில் 4 சதுர மீட்டர் அளவில் அமைந்துள்ள அறைகள் ஒதுக்கப்படுவதுடன் மினாவில் தீப்பிடிக்காத டென்ட்டுகளில் 1.6 சதுர மீட்டர் அளவுள்ள இடம் ஒதுக்கப்படும். அரபு யாத்ரீகர்களுக்கு 380,000 டென்ட்டுகள் அமைக்க 9 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்ரீகர்கள் நடந்து செல்வதற்காவே சுமார் 1,000 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஜரோல் முதல் ஹரம் ஷரீஃப் வரையிலான சுரங்கவழி நடைபாதையில் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு வாகனங்களுக்கான சாலையில் மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்கள், முதிய வயதினரை கொண்டு செல்வதற்காக 25 கார்களை வழங்கியுள்ளது புனித மக்கா நகர மேம்பாட்டு ஆணையம்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா பயணம் ~ புள்ளிவிபரம் வெளியீடு!

அதிரை நியூஸ்: மே 30
2017 ஆம் ஆண்டு 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா செய்துள்ளதாக புள்ளிவிபரம் வெளியீடு

கடந்த 2017 ஆம் ஆண்டு மொத்தம் 19,079,306 பேர் உம்ரா செய்துள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்தின் ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது சவுதி அரசின் புள்ளி விபரங்களுக்கான பொது ஆணையம் (The General Authority for Statistics - GaStat).

1. வெளிநாடுகளிலிருந்து வந்து உம்ரா செய்தவர்கள் 6,532,074
2. உள்நாட்டிலிருந்து உம்ரா செய்தவர்கள் 12,547,232 (சவுதி மற்றும் சவுதிவாழ் வெளிநாட்டினர்)
3. இதில் சவுதிக்கள் 46.9% சவுதிவாழ் வெளிநாட்டினர் 53.1%
4. உள்நாட்டு யாத்ரீகர்களில் ஆண்கள் 64.3% பெண்கள் 35.7%
5. புனித ரமலான் மாதமே உச்சபட்ச உம்ரா சீஸனாக விளங்குகிறது, இதில் உள்நாட்டு உம்ரா யாத்ரீகர்களின் பங்கு 53.6%
6. ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையமே அதிக வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்களை கையாண்டுள்ளது, 62.5%.
7. மதினா பிரின்ஸ் முஹமது பின் அப்துல் அஜீஸ் விமான நிலையம் ஜித்தாவிற்கு அடுத்து அதிக வெளிநாட்டு உம்ரா பயணிகளை கையாண்டுள்ளது, 25.7%.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

துபையில் அதிரை பிரமுகர் வஃபாத்!

அதிரை நியூஸ்: மே 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், முகம்மது ஹனிபா அவர்களின் மருமகனும், ஹாஜி எஸ். அகமது கபீர், ஹாஜி எஸ். அகமது அன்சாரி ஆகியோரின் சகோதரரும், பைசல் அகமது அவர்களின் மாமனாரும், எஸ். அப்சல் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். முகம்மது சேக்காதியார் (வயது 62) அவர்கள் துபையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (31-05-2018) வியாழக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பின் துபை அல்குஸ் ( AL QUOZ) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, May 29, 2018

ஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை இன்று முதல் தொடக்கம்!

அதிரை நியூஸ்: மே 29
ஜித்தா புதிய விமான நிலையத்தில் இன்று முதலாவது விமானச் சேவை துவங்குகிறது.

ஜித்தாவில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக பிரம்மாண்ட விமான நிலையங்களில் ஒன்றான கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் இன்று அதிகாரபூர்வமற்ற முறையில் திறக்கப்படுவதையொட்டி (Soft Opening) முதலாவது உள்நாட்டு விமானச் சேவை துவங்குவதையடுத்து அல்குரையாத் (Al-Qurayyat)  நகர விமான நிலையத்திலிருந்து வந்திறங்குகிறது.

ஜித்தா நகரின் வட திசையில் 19வது கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த புதிய ஜித்தா விமான நிலையம் அதிகாரபூர்வமாக எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் திறக்கப்பட்டு (Official Opening) உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சேவைகள் (Domestic & International Services) முழுஅளவில் மேற்கொள்ளப்படும் அதுவரை படிப்படியாக உள்நாட்டுச் சேவைகள் மட்டும் அதிகரிக்கப்பட்டு வரும்.

இன்று (மே 29) முதல் துவங்கும் பரீட்ச்சார்த்த உள்நாட்டு விமான சேவைகள் 2 நுழைவாயில்கள் வழியாக மட்டும் மேற்கொள்ளப்படும், அடுத்த வாரம் இது 6 நுழைவாயில்களாக அதிகரிக்கப்படும். இன்னும் இரு நுழைவாயில்களில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சேவைகள் துவங்கும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

அமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப்பு!

அதிரை நியூஸ்: மே 29
அமீரகத்தில் சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருவது அறிந்ததே. அந்த வகையில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் டீசல் விலை சற்றே கூடுதல் விலை உயர்வுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் மே மற்றும் ஏப்ரல் மாத பெட்ரோல் விலைகள் ஒப்பீட்டுக்காக மட்டும்.
1. சூப்பர் 98 - 2.63 திர்ஹம் (மே 2.49) (ஏப்ரல் 2.33)
2. ஸ்பெஷல் 95 - 2.51 திர்ஹம் (மே 2.37) (ஏப்ரல் 2.22)
3. டீசல் - 2.71 திர்ஹம் (மே 2.56) (ஏப்ரல் 2.40)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

மின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்கள் ~ இலவச பதிவிறக்கம் / மறுபதிப்புக்கு அனுமதி!

அதிரை நியூஸ்: மே 29
“விழிப்புணர்வு” பக்கங்கள்... என்கிற தலைப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு  அதிராம்பட்டினத்தில் வெளியிடப்பட்ட இந்நூலில்,
1.   சீட்டுக் கட்டு ராஜா !
2.   ரேஷன் கடைகளில் முறைகேடா ?
3.   லஞ்சமா ?
4.   கலெக்டரிடம் புகார் செய்ய !
5.   தகவல் அறியும் உரிமைச் சட்டம்
6.   கவனம்: நிலம் வாங்கும் முன் !
7.   பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள்?
8.   கொசு(த்) தொல்லையிலிருந்து விடுபட...
9.   கலப்படம் – ஓர் எச்சரிக்கை !
10.  சிட்டுக் குருவியைக் காணவில்லை !
11.  வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு !
12.  வேலைவாய்ப்பு ! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
13.  V.A.O. வின் பணிகள் யாவை ?
14.  புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?
15.  தண்ணீர் சேமிப்பீர் !
16.  அதிரைக் கடல் !
17.  குடிக்காதே !
18.  அதிரையின் விருந்து உபசரிப்புகள் !
19.  மந்திரவாதி !
20.  TEEN AGE – பருவம் !
21.  கள்ளக் காதல் !
22.  மரணத்தின் நிரலாக.....!
23.   பயண அனுபவங்கள் ~ சீனா

ஆகிய தலைப்புகளில் பயனளிக்கும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வாசகர்கள் இலகுவாகப் படிப்பதற்கும் / பதிவு இறக்கம் செய்வதற்கும், நூல் ஆசிரியரின் அனுமதியோடு “நூல் வடிவில்” [ E-BOOK ] பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வாசகர்கள் இலவசமாக பதிவிறக்கம் ~ மறுபதிப்பு செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

- அதிரை நியூஸ்

புதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனுமதி பெற...

புதிதாக தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான தொழில் உரிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாக பெறவும், கடன் வசதிகளை பெறவும் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ள புதிய இணையதள சேவைகள்  குறித்து  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில்  தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான தொழில் உரிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாக பெற்று தருவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் செயல்பட்டு வரும் ஒரு முனை தீர்வு குழு வாயிலாக விரைந்து பெற்று அளித்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி. தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில் துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச் சாளர தகவு (Single  Window Portal) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து, கூடுதலாக சுகாதாரத் துறையிடமிருந்து பெறவேண்டிய தடையில்லாச் சான்றிதழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரிடமிருந்து பெற வேண்டிய உரிமம் மற்றம் மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய குறைந்த அழுத்த மின் இணைப்பு ஆகியவற்றிற்கான சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர தகவு (https:/easybusiness.tn.gov.in/msme) அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், தொழில் முனைவோர்கள் துறைகளிடமிருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லாச் சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும், தமிழ்நாடு அரசு இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக செயல்படுத்திவரும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) ஆகிய இரு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை இணையதளத்தின் வாயிலாக, பதிவேற்றம் செய்து கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட (www.msmseonline.tn.gov.in/uyegp) மற்றும் (www.msmseonline.tn.gov.in/needs)  தகவு அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது.

தொழில் வணித்துறையின் திட்டங்கள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக, சமூக ஊடக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தொழில் முனைவோர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து துறை அமல்படுத்தும் திட்டங்களை மாற்றியமைக்கவும் மேம்படுத்திடவும்  இயலும்.

எனவே, பயனாளிகள் அனைவரும் மேற்கூறிய திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறவும் கூடுதல் விவரங்களை பெற பொது  மேலாளர், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தினை நேரில் அணுகுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Monday, May 28, 2018

பட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியாமல் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை மே.28
பட்டுக்கோட்டையில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தொடர்ந்து 7 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் 7 ஆவது ஊதியக்குழு சம்பந்தப்பட்ட கமலேஷ் சந்திர கமிட்டி அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி இந்தியா முழுவதும், கடந்த 22 ஆம் தேதி முதல் அஞ்சல் ஊழியர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலக நுழைவு வாயில் அருகே திங்கள்கிழமை மாலை அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மேலாடை இன்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். தேசிய அஞ்சல் ஊழியர் சங்க அகில இந்திய அமைப்பு செயலாளர் ஜி.சீனிவாசன், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜவஹர் பாபு, மதிமுக நகரச்செயலாளர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் நகரச்செயலாளர் சக்ரவர்த்தி, தொலைத்தொடர்பு துறை சங்க முன்னாள் மாநிலத்தலைவர் சிவ.சிதம்பரம், அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் சத்தியமூர்த்தி, அஞ்சல் ஊழியர் சங்க திருத்துறைப்பூண்டி கிளை செயலாளர் மனோகரன், தலைவர் நாகலிங்கம் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். நிறைவாக கிராம அஞ்சல் ஊழியர் முருகையன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 200 பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேல்சட்டை அணியாமல் போராட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டதால் ஜனசந்தடி நிறைந்த தலைமை தபால் நிலையம் அருகே பரபரப்பான சூழல் நிலவியது.

ஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீட்டிற்கு அதிரையில் இலவச மதிப்பீடு!

அதிராம்பட்டினம், மே 28
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஜக்காத். ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும். இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலானில் ஏழை, எளிய மக்கள், பைத்துல்மால் போன்ற சேவை அமைப்பிற்கும் ஜக்காத் தொகை வாரி வழங்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் திலகர் தெருவைச் (ஹாஜி ஓ.கே.எம் லேன்) சேர்ந்தவர் ஹாஜி ஓ.கே.எம் ஷிஃபஹத்துல்லா. இதே பகுதியில்,  'மாஜ்தா ஜுவல்லரி' நிறுவனத்தை கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வரும் இவர், ஜக்காத் கணக்கீடுக்கு உட்பட்ட ஆபரணத் தங்கம், வெள்ளி நகைகளுக்கு ஜக்காத் தொகையை மதிப்பீடு செய்து வழங்குகிறார்.

இச்சேவையை, அதிராம்பட்டினத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இலவசமாக செய்து வருகிறார். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை (தொழுகை நேரங்கள் நீங்கலாக) ஆபரணங்கள் அளவீடு செய்யப்படுகிறது. ஜக்காத் வழங்கக்கூடியவர்கள் இந்நிறுவனம் வழங்கி வரும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு:
மாஜ்தா ஜுவல்லரி
9865370356
ஹாஜி ஓ.கே.எம் ஷிபஹத்துல்லா
திலகர் தெரு (ஹாஜி ஓ.கே.எம் லேன்)
அதிராம்பட்டினம்

துபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டேக்ஸி சேவை !

அதிரை நியூஸ்: மே 28
மாற்றுத் திறனாளிகள் 2018 வருட முடிவு வரை துபை டேக்ஸிக்களில் இலவசமாக பயணம் செய்யும் சலுகை

துபை போக்குவரத்து துறையும் (RTA) அல் புத்தைம் மோட்டார்ஸ் (Al Futtaim Motors) எனும் தனியார் நிறுவனமும் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச டேக்ஸி சேவையை இவ்வருட (2018) இறுதி வரை வழங்க முன்வந்துள்ளன. இந்த வசதியை கொண்டு டேக்ஸிக்களை முன்பதிவு செய்து ஏர்போர்ட் உள்ளிட்ட துபையின் அனைத்து பகுதிகளுக்கும் இலவசமாக செல்லலாம்.(துபை மாநகருக்குள் மட்டும்) இத்திட்டத்திற்கு 'அல் கைர் ரைடு' (Al Khair Ride) என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் வீல்சேருடன் (சக்கர நாற்காலியுடன்) உள்ள மாற்றுத் திறனாளிகள் டேக்ஸிக்களுக்குள் ஏறுவதற்கான தரைதள வசதிகளும் இந்த சிறப்பு டேக்ஸிக்களில் செய்யப்பட்டுள்ளன. இந்த டேக்ஸிக்கள் ஏர்போர்ட்டை மையமாக கொண்டு 24 மணிநேரமும் இயங்கும் என்பதுடன் இந்த டேக்ஸிக்களை இயக்கும் டிரைவர்கள் மாற்றுத் திறனாளி பயணிகளுடன் கனிவுடன் நடந்து கொள்ள, தேவையான உதவிகளை செய்யவும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான டேக்ஸிக்களை முன்பதிவு செய்ய 04-2080808  என்ற இந்த தொலைபேசி எண்ணில் அழைத்துப் பேசவும்.

அமீரக சட்டம் யாரையெல்லாம் மாற்றுத் திறனாளிகள் என வரையறுக்கின்றது?

The UAE’s Federal Law No 29 of 2006 seeks to protect the rights of people of determination.

As stipulated in Article 1 of the law, people of determination are those who are “suffering from a temporary or permanent, full or partial deficiency or infirmity in his physical, sensory, mental, communicational, educational or psychological abilities to an extent that limits his possibility of performing the ordinary requirements as normal people.”

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

மதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ அவசரகால சிறப்பு அதிரடிப்படை!

அதிரை நியூஸ்: மே 28
புனிதமிகு மதினாவின் மஸ்ஜிதன்னபவி பள்ளியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அவசரகால சிறப்பு அதிரடிப்படையினர் (Special Emergency Force) முதியவர்களும், சிறார்களும் எத்தகைய சிரமமின்றி தங்களுடைய வணக்க வழிபாடுகளை செலுத்துவதற்கு முன்னுரிமை தந்தும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கியும் வருகின்றனர்.

மஸ்ஜிதினுள் கூட்டத்தினர் எளிதாக சென்று வர ஏதுவாக பள்ளியின் உள்ளேயுள்ள வழித்தடங்களிவும், நுழைவாயில்களிலும் நின்றும், வெளி வராந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டு விடாமலும் பாதுகாத்து வருகின்றனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
 

துபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

அதிரை நியூஸ்: மே 28
துபையில் கடந்த 17.05.2018 அன்று முதல் ஒவ்வொரு குடியிருப்பக்களின் உரிமையாளர்களும் தனியார் குப்பை அள்ளும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு அள்ளும் குப்பைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த கட்டணத்தை வாடகைக்கு குடியிருப்போரிடமிருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் எனவும் வழிகாட்டப்பட்டிருந்தது.

துபை மாநகராட்சியின் இந்த உத்தரவு குப்பை அள்ளும் நிறுவனங்கள் துபை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் அபராதம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுறததால் இந்த உத்தரவு அமுலாகும் முன்பாகவே அதாவது 15.05.2018 அன்றே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாக துபை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, மறுஉத்தரவு வரும் வரை கட்டிட உரிமையாளர்களும், வாடகைதாரர்களும் குப்பை அள்ளுவதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

பாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய தனி ஒருவன் (வீடியோ)

அதிரை நியூஸ்: மே 28
பிரான்ஸ், பாரீஸில் 4 வது மாடியின் பால்கனி தவறிவிழுந்து தொங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை தன்னுடைய பாதுகாப்பை பற்றி சிறிதும் கவலை கொள்ளலாம் சில நொடிகளில் 4 மாடிகளின் பால்கனிகளை வெறும் கை, கால்களின் துணையோடு தாவியேறி காப்பாற்றிய 22 வயது மாலி நாட்டின் இளைஞர் மொம்மோது (முஹமது) கஸ்ஸாமா என்ற அவரின் வீர தீர செயலுக்காக சமூக வலைதளவாசிகளால் வைரலாக பகிரப்பட்டு போற்றப்பட்டு வருகிறார்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் (அமீரக நேரம் இரவு 10 மணி) நடைபெற்ற போது பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து ஒருவர் குழந்தை வழுவிவிடாமல் பிடித்துக் கொண்டிருந்த போது கீழிலிருந்த மக்கள் கூட்டம் வெறும் அபாய சத்தமெழுப்பிக் கொண்டும், கார்களில் இருந்தவர்கள் ஹரான் அடித்துக் கொண்டும் உதவிக்கு பிறரை அழைத்துக் கொண்டிருந்த நிலையில் இவர் எதையும் யோசிக்காமல் காரியத்தில் உடனடியாக இறங்கியுள்ளார்.

குழந்தை தவறிவிழுந்து தொங்கியபோது அதன் தாய் பாரீஸிலேயே இல்லையாம் தந்தையோ குழந்தையை தனியே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார், இந்த செயலுக்காக தற்போது போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். தீயணைப்புத் துறை வருகை தந்த போது குழந்தை  மொம்மோது கஸ்ஸாமாவால் காப்பாற்றப்பட்டிருந்ததை கண்ட அவர்கள் 'அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு முன் துணிச்சலான, உடல் தகுதியுடைய ஒருவர் இருந்துள்ளார்' எனக் கூறினர் ஆனால் கஸ்ஸாமோவோ இது இறைவனின் உதவி என கூறினார்.

கஸ்ஸாமா சில மாதங்களுக்கு முன் தான் பிழைப்புத் தேடி பாரீஸ் வந்துள்ளார். இவரது வீர தீர செயலைப்பற்ற அறிந்த பாரீஸ் நகர மேயர் அன்னி ஹிடால்கோ மிகவும் அவரை பாராட்டியதுடன் நாட்டு மக்கள் கஸ்ஸாமா பிரான்ஸிலேயே தங்கி உழைத்து முன்னேற தேவையான செய்து தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய செய்தி: 
வீர தீர இளைஞர் கஸ்ஸாமாவுக்கு 'பிரான்ஸின் கௌரவ குடியுரிமை' வழங்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய வேலைவாய்ப்பிற்கும் பிரான்ஸின் நிரந்தர குடிமகனாவதற்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பாரீஸ் நகர  மேயர் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

துபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக தாயகம் அனுப்பி வைப்பு!

துபை ஈமான் அமைப்பின் முயற்சியால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

துபை உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு புதுக்கோட்டையை, பிள்ளையப்பட்டி, காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொத்தனார் வேலைக்கு வந்தனர்.

இந்த நிறுவனத்தை மேலூர், வடகம் பட்டியைச் சேர்ந்த சேவுகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த வேலைக்காக இருவரும் தலா 70,000 ரூபாயை கட்டினர்.

இவர்களது வேலையுடன் கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளும் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்களால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியவில்லை. எனவே நிர்வாகத்திடம் தங்களுக்கு வேலை கஷ்டமாக இருக்கிறது. எங்களை ஊருக்கு திரும்பி அனுப்பி வையுங்கள் என கேட்டனர். ஊருக்கெல்லாம் அனுப்ப முடியாது என கூறி விட்டு, அவர்களை அடித்து வேலைக்கு அனுப்பினர்.

இந்த தகவலை சொந்த ஊரில் உள்ள தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.

ஆனால் கம்பெனி நிர்வாகம் இரண்டு பேரும் தங்களது நிறுவனத்தில் இருந்து ஓடிவிட்டனர் என புகார் அளித்துள்ளனர். மேலும் இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கும் போது அதற்கான பதில் அளிப்பதில்லை.

இதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் வெளியில் உள்ள நண்பர்களின் உதவியுடன் வசித்து வருகின்றனர். மேலும் உணவுக்காகவும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இருவரும் போலீஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகம் என பல்வேறு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து புகார் தெரிவித்தனர்.

மேலும் தங்களை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உதவுமாறு இந்திய துணை தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைகாத நிலையில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை உதவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து துபாயில் உள்ள அல் வஹா நிறுவனத்தின் நிறுவன தலைவர் புதுக்கோட்டை அல்ஹாஜ் ஷர்புதீன் மூலம் அவர்கள் வேலை பார்த்து வந்த நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்களது விசா கேன்சல் செய்யப்பட்டு 25.05.2018 வெள்ளிக்கிழமை மாலை சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

அந்த இரண்டு இளைஞர்களும் துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், அல் வஹா நிறுவன அதிபர் புதுக்கோட்டை ஷர்புதீன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றனர். 

சவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 28
27.05.2018 ஞாயிறு அன்று மாலை சவூதி அரேபியா தம்மாம் மாநகர் ரோஸ் ரெஸ்டாரண்ட் ஆடிட்டோரியத்தில் வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்று வாழ்த்துரை வழங்கிய வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சர்வீஸ் பொது மேலாளர் திரு என்னும் திருஞான சம்பந்தம் அவர்கள் முஸ்லிம்களின் நோன்பு என்பது ஈகையை உணர்த்தும் ஒரு அரிய நிகழ்வாகும் என குறிப்பிட்டார்.

அசோக் லேலண்ட் கம்பெனியின் துபாய் டிவிஷன் துணை பொது மேலாளர் உமா சங்கர் தனது கருத்துரையில் தாம் ஒரு வாகன விபத்தில் சிக்கி கொண்ட போது பலரது வேடிக்கைக்கு முன்னால் ஒரு இஸ்லாமிய நண்பர் ஓடி வந்து என்னை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்து எனது பெற்றோர் வரும் வரை அருகில் இருந்து கவனித்தார்.

அந்த இஸ்லாமிய நண்பரின் உரிய நேரத்திலான உதவியால், நான் இன்று உடல் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டவர்,இரக்கமும் ஈகையும் தான் முஸ்லிம்களின் உன்னதமான சொத்து என்று பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார்.

அசோக் லேலண்ட் கம்பெனியின் துபாய் டிவிஷன் மேலாளர் வாயல் அவர்கள் தனது உரையில் நோன்பு என்பது ஒரு மனிதனின் குணங்களை மேன்மைபடுத்துவதற்கும்,அழகிய பண்புகளை வார்த்தெடுப்பதற்கும் உரிய பயிற்சியாகும் என குறிப்பிட்டார்.

இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய சகோதரர்களையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி சகோதரத்துவத்தை வெளிக்கொணர்ந்த வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனியின் நிர்வாகத்திற்கும்,பொது மேலாளர் திரு சார் அவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக நோன்பின் மாண்பு என்னும் தலைப்பில் கீழை ஜஹாங்கீர் அரூஸி உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாத் பிரமுகர்கள் கரீம்பாசிர்,தொண்டியப்பா என்னும் அபுபக்கர்,தாஜுல் ஆரிபீன்,அப்துல் ரவூப்,ஸ்பேர் பார்ட்ஸ் மேலாளர் சம்பத்,சர்வீஸ் மேலாளர் வெங்கடேஷ் மற்றும் வெஸ்டர்ன் ஆட்டோ சூப்பர் வைசர்கள்,தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

Sunday, May 27, 2018

ஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரை பிரமுகர்கள் பங்கேற்பு (படங்கள்)

அதிரை நியூஸ், மே 27
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியினர் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் சார்பில் ஆண்டு தோறும் புனிதமிகு ரமலான் மாதத்தில் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடமும், ஜப்பான் ஆஷிகா நகரில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பங்காளதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், அதிரையின் பிரபல பிரியாணி உணவு, சிக்கன் ப்ரை, ஜூஸ், கடல்பாசி, பழங்கள் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.