.

Pages

Friday, May 18, 2018

அதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை பதிவு, திருத்தம் செய்யலாம்'

பட்டுக்கோட்டை, மே 18:
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்திலுள்ள 28 அஞ்சலகங்களில் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றார் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.பஞ்சாபகேசன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய 2 தலைமை அஞ்சலகங்கள், அதிராம்பட்டினம், ஆலத்தூர், ஆவணம், கோட்டைத்தெரு, குருவிக்கரம்பை, மதுக்கூர்,
நாடிமுத்துநகர், ஒரத்தநாடு,  ஒட்டங்காடு, பாப்பாநாடு, பேராவூரணி, மேலஉளுர், தாமரங்கோட்டை, திருவோணம், திருச்சிற்றம்பலம், வடசேரி,  ஆயக்காரம்புலம் 2 ஆம் சேத்தி, கரியாப்பட்டினம், குன்னலூர், முத்துப்பேட்டை, பாமணி, தகட்டூர்,  தலைஞாயிறு அக்ரகாரம்,  தோப்புத்துறை, வேதாரண்யம், விளக்குடி ஆகிய இடங்களில் இயங்கும் துணை அஞ்சல் நிலையங்களிலும் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.

ஆதார் எண் பதிவுக்கு தங்களது வயது மற்றும் முகவரிக்கான  சான்றிதழ்களுடன் வர வேண்டும். திருத்தங்கள் செய்ய வயது மற்றும் முகவரிக்கான சான்றிதழ்களுடன் ஆதார் அட்டையையும் கொண்டு வர வேண்டும். ஆதார் எண்ணை பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் திருத்தம் செய்ய ரூ.30 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 04373-252078,  254188,  04369-222890 ஆகிய எண்களில்  தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.