.

Pages

Monday, May 28, 2018

சவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 28
27.05.2018 ஞாயிறு அன்று மாலை சவூதி அரேபியா தம்மாம் மாநகர் ரோஸ் ரெஸ்டாரண்ட் ஆடிட்டோரியத்தில் வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்று வாழ்த்துரை வழங்கிய வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சர்வீஸ் பொது மேலாளர் திரு என்னும் திருஞான சம்பந்தம் அவர்கள் முஸ்லிம்களின் நோன்பு என்பது ஈகையை உணர்த்தும் ஒரு அரிய நிகழ்வாகும் என குறிப்பிட்டார்.

அசோக் லேலண்ட் கம்பெனியின் துபாய் டிவிஷன் துணை பொது மேலாளர் உமா சங்கர் தனது கருத்துரையில் தாம் ஒரு வாகன விபத்தில் சிக்கி கொண்ட போது பலரது வேடிக்கைக்கு முன்னால் ஒரு இஸ்லாமிய நண்பர் ஓடி வந்து என்னை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்து எனது பெற்றோர் வரும் வரை அருகில் இருந்து கவனித்தார்.

அந்த இஸ்லாமிய நண்பரின் உரிய நேரத்திலான உதவியால், நான் இன்று உடல் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டவர்,இரக்கமும் ஈகையும் தான் முஸ்லிம்களின் உன்னதமான சொத்து என்று பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார்.

அசோக் லேலண்ட் கம்பெனியின் துபாய் டிவிஷன் மேலாளர் வாயல் அவர்கள் தனது உரையில் நோன்பு என்பது ஒரு மனிதனின் குணங்களை மேன்மைபடுத்துவதற்கும்,அழகிய பண்புகளை வார்த்தெடுப்பதற்கும் உரிய பயிற்சியாகும் என குறிப்பிட்டார்.

இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய சகோதரர்களையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி சகோதரத்துவத்தை வெளிக்கொணர்ந்த வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனியின் நிர்வாகத்திற்கும்,பொது மேலாளர் திரு சார் அவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக நோன்பின் மாண்பு என்னும் தலைப்பில் கீழை ஜஹாங்கீர் அரூஸி உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாத் பிரமுகர்கள் கரீம்பாசிர்,தொண்டியப்பா என்னும் அபுபக்கர்,தாஜுல் ஆரிபீன்,அப்துல் ரவூப்,ஸ்பேர் பார்ட்ஸ் மேலாளர் சம்பத்,சர்வீஸ் மேலாளர் வெங்கடேஷ் மற்றும் வெஸ்டர்ன் ஆட்டோ சூப்பர் வைசர்கள்,தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.