.

Pages

Saturday, May 19, 2018

உலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல்!

அதிரை நியூஸ்: மே 19
முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்துடன் முடிவடையும் என்றாலும் இந்த நேரங்கள் உலகில் மனிதர்கள் வாழும் 6 கண்டங்களிலுமுள்ள ஒவ்வொரு நாடும் அமைந்திருக்கும் புவியியல் அமைப்பு மற்றும் நேர மண்டல சார்புகளுக்கு ஏற்ப நேரங்கள் கூடுதல் குறைவாக அமையும்.

இதனடிப்படையில் இந்த வருட ரமலானில் கூடுதல் குறைவு நேரங்களுடன் நோன்பு நோற்கும் நாடுகள் குறித்த சில புள்ளிவிபரங்கள்:

நீண்ட நோன்பு நேரமுடைய நாடுகள்:
1. ஐஸ்லாந்து – 20 மணிநேரம் 17 நிமிடங்கள் - அதிகாலை மணி 2.27 ஃபஜர் முதல் மாலை மணி 10.44 மஃரிப் வரை. (10.44 என்பது அங்கு மாலை தான் இரவல்ல)

2. பின்லாந்து – 19.25 மணிநேரம்.

3. கிரீன்லாந்து – 19.21 மணிநேரம்.

4. நார்வே – 19.19 மணிநேரம்.

5. சுவீடன் - 19.12 மணிநேரம்.

நோன்பு நேரம் குறைவான நாடுகள்:
1. சிலி – 10.33 மணிநேரம் (ஐஸ்லாந்தை விட 10 மணிநேரம் 44 நிமிடங்கள் குறைவு)

2. நியூஸிலாந்து – 11.35 மணிநேரம்.

3. தென் ஆப்பிரிக்கா – 11.47 மணிநேரம்.

4. பிரேஸில் மற்றும் ஆஸ்திரேலியா – தலா 11.59 மணிநேரங்கள்.

5. ஐக்கிய அரபு அமீரகம் - 14.52 மணிநேரம்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.