அதிரை நியூஸ்: மே 22
அமீரகத்தில் தற்போது 2 வருட ரெஸிடென்ட் விசா வழங்கும் திட்டமே அமலில் உள்ளது. இதிலிருந்து முதலீட்டாளர்கள், மருத்துவம், தொழில்நுட்பம், ஆராய்ச்சிக்களங்களில் சிறந்து விளங்கும் வல்லுனர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்கு 10 வருட ரெஸிடென்ட் விசா வழங்க அமீரக அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
மேலும், தற்போது வெளிநாட்டினர் தொழில் துவங்குவதாக இருந்தால் ஒரு அமீரகத்தினரின் பங்கு கூடுதலாக இருக்கும் நிலையில் கூட்டாக தான் தொழில் துவங்க முடியும் என்பதும் மாற்றப்பட்டு இனி 100 சதவிகிதம் சுய முதலீட்டிலேயே தொழில் துவங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழுமையான சுய முதலீட்டு வசதி இதுவரை ப்ரீஸோன் மண்டலங்களுக்குள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இனி இமராத்திகளை பங்குதாரர்களாக சேர்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
மாணவர்கள் வருடந்தோறும் புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்களின் ஸ்பான்சரின் கீழ் இருந்து வரும் மாணவர்களின் விசாவும் இனி 5 வருட விசாவாக வழங்கப்படும் என்பதுடன் பல்கலைக்கழக படிப்பு முடிந்தபின் மேற்படிப்பை தொடரவும், தொழில் துவங்கவும் ஏதுவாகவும் தொடர்ந்து தனித்த ரெஸிடென்ட் விசாவாக நீட்டித்துத் தரப்படும். மேலும் படிப்பில் தனித்து சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் 10 வருட விசா வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு அதிரடி மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.