பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பி வைக்கப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதினர்.
இத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2 ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளன.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மாவட்ட மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று தனித்தேர்வர்களுக்கு அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது அளித்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மே 28 -இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:
இதைத்தொடர்ந்து, மே 28 -ஆம் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மே 28 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் அளித்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தாங்கள் எழுதிய எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விரும்பினால் விண்ணப்பிக்கலாம். மே 24 -ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் மே 26 -ஆம் தேதி (சனிக்கிழமை) வரை, தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையம் மூலமாகவும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 28 -இல் துணைத் தேர்வு:
கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு வருகை புரியாதவர்களுக்கும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.