.

Pages

Thursday, May 24, 2018

பட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 24
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பழைய நகரப் பகுதியில் வாழ்பவர் முஹமது தமீம் ஷாகிப்ஷாதா, இவர் ஒரு காலிகிராபி (Calligraphy) எனப்படும் அரபி எழுத்துக்களை அழகிய முறையில் வரையும் கலைஞர். இவர் முழுக்க முழுக்க தனது காலிகிராபி கைவண்ணத்தில் அல் குர்ஆன் ஒன்றை பட்டுத்துணியில் (In Silk Fabric) வரைந்து தயாரித்துள்ளார். இந்த முயற்சியின் மூலம் ஆப்கானிய பாரம்பரியக் கலையான காலிகிராபி மீண்டும் தழைத்தோங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பு: 
இது ஒரு செய்தி என்றளவிலேயே பகிரப்படுகிறது. பட்டுத்துணியில் எழுதுவது, தங்கத்தில் வார்ப்பது, மிகச்சிறிய அளவில் தயாரிப்பது, கின்னஸ் சைஸூக்கு தயாரிப்பது அல்லது பல்வேறு வித்தியாசமான முறைகளில் பிறரின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதால் ஏதும் சிறப்பாக நிகழப்போவதில்லை மாறாக அல் குர்ஆனை மனிதகுலத்தின் வழிகாட்டியாக ஏற்று நடப்பதன் மூலம் மட்டுமே நாம் இம்மை மறுமையில் சிறப்படைய முடியும். அல் குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் இன்ஷா அல்லாஹ் நம் வாழ்வை குர்ஆனிய வாழ்வாக அமைத்துக் கொள்ள முயல்வோமாக!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.