.

Pages

Friday, May 25, 2018

பேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி!

பேராவூரணி மே.25
பேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் சின்னையன் (வயது 50), கூலித்தொழிலாளி.  பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை அன்று மாலை இடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரம்  பலத்த மழை கொட்டியது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை செங்கமங்கலத்தில் உள்ள தோப்பு பகுதியில் சின்னையன், மழைக்காக ஒதுங்கி நின்றுள்ளார். அப்பொழுது திடீரென இடி, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பேராவூரணி காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.