முத்துப்பேட்டை, மே 31
முத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் ரூ.4 ஆயிரம் பணத்துடன் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்து உதயமார்த்தாண்டபுரம் ஆக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (54) இவரது வீட்டின் அருகே பாதைக்காக பட்டுக்கோட்டையை சேர்ந்த வேம்பையன் என்பவரிடமிருந்து 1.5 சென்ட் இடம் வாங்கினார். இதனை பத்திரப்பதிவு செய்வதற்காக முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். அப்போது, அக்கு பணியில் இருந்த சார் பதிவாளர் உதயகுமார் பத்திரப்பதிவுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் அளவுக்கு தன்னிடம் வசதியில்லை என்று கூறியதால், ரூ.4 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே இடத்தை பதிவு செய்துதர முடியும் என்று கூறியுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலசுப்பிரமணியன், இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை போலீசார் கூறியது போல் மாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உதயகுமாரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி காந்திமதி நாதன, இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், அருள்பிரியா தலைமையிலான போலீசார் அலுவலகத்திற்குள் புகுந்து லஞ்சமாக பெற்ற ரூ.4 ஆயிரம் பணத்துடன் உதயகுமாரை கைது செய்தனர்.
மேலும், அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணமும் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன்படி, முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை துவங்கிய சோதனை இரவு 10 மணிக்கும் மேலாக நீடித்தது. முத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.