.

Pages

Wednesday, May 30, 2018

ஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உயர்வு!

அதிரை நியூஸ்: மே 30
ஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியாலாக உயர்ந்தது

புனித ஹஜ்ஜின் போது புனித மக்கா நகரை சுற்றியுள்ள புனிதத்தலங்களுக்கு செல்வதற்காக மஷாயர் எனப்படும் மெட்ரோ ரயில்கள் (Mashaer train) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் யாத்ரீகர்கள் பயணம் செய்வதற்கு 250 ரியால்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது 400 ரியால்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஹஜ் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இப்புதிய கட்டணங்களையே ஆன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் ஹஜ் காலத்தின் போது மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்பந்தம் செய்துள்ள புதிய நிறுவனத்தால் ஏற்றப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது, இந்த புதிய நிறுவனத்தை மாநகராட்சி மற்றும் நகர அலுவல்களுக்கான அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

இதற்கிடையில், ஹஜ் முயாஸர் Haj Muyasar (easy pilgrimage) எனப்படும் ஹஜ் சேவையை 3,465 ரியால்கள் கட்டணத்தில் உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழங்க 20 சவுதி கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த கட்டண ஹஜ் சேவையை வழங்க 57 சவுதி கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் சுமார் 6,500 உள்நாட்டு யாத்ரீகர்கள் பயனடைவர்.

இந்த யாத்ரீகர்கள் ஒவ்வொருவருக்கும் அனுமதி பெற்ற தங்குமிடங்களில் மக்காவில் 4 சதுர மீட்டர் அளவில் அமைந்துள்ள அறைகள் ஒதுக்கப்படுவதுடன் மினாவில் தீப்பிடிக்காத டென்ட்டுகளில் 1.6 சதுர மீட்டர் அளவுள்ள இடம் ஒதுக்கப்படும். அரபு யாத்ரீகர்களுக்கு 380,000 டென்ட்டுகள் அமைக்க 9 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்ரீகர்கள் நடந்து செல்வதற்காவே சுமார் 1,000 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஜரோல் முதல் ஹரம் ஷரீஃப் வரையிலான சுரங்கவழி நடைபாதையில் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு வாகனங்களுக்கான சாலையில் மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்கள், முதிய வயதினரை கொண்டு செல்வதற்காக 25 கார்களை வழங்கியுள்ளது புனித மக்கா நகர மேம்பாட்டு ஆணையம்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.