.

Pages

Thursday, May 24, 2018

'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி ~ அதிரையில் இலவச டோர் டெலிவரி!

பட்டுக்கோட்டை, மே 24
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 42). பட்டதாரி இளைஞர். இயற்கை ஆர்வலரான இவர், பட்டுக்கோட்டை பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே 'ஒளவை' மரச்செக்கு எண்ணெய் நிலையத்தை புதிதாகத் தொடங்கி நடத்தி வருகிறார். இங்கு, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கு மூலம் இயற்கையாக உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க அதிராம்பட்டினம் பகுதியில் இலவச டோர் டெலிவரி செய்ய இருப்பதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் கூறியது;
தரமான மரச்செக்கு எண்ணைய் தருகின்றோம் என்பது வழக்கமான வார்த்தையாகிவிட்ட இந்த நேரத்தில் எங்களிடமும் வேறு வார்த்தையின்றி அதையே சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் ஆனால் இதில் உள்ள சிலவிசயங்களை ஆழ்ந்து தெரிந்துகொள்ளுங்கள்...

கேள்வி 1: மரச்செக்கில் செய்யும் அனைத்து நல்லெண்ணையும் சிறந்ததா ?
பதில்: இல்லை. ஏனெனில் எள்ளில் மூன்றுவகை உள்ளது. கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை. இதில் கருப்பு எள்ளில் மட்டுமே மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளதாக ஆராய்ச்சி சொல்கின்றது. ஆனால் இந்த எள்ளு விலை அதிகம். அதே சமயத்தில் கசப்பும் அதிகம். ஆகவே சந்தையில் கிடைக்கும் 90 சதவீத நல்லெண்ணைய் சிவப்பு மற்றும் வெள்ளை எள்ளில் இருந்து எடுக்கப்பட்டு கருப்பு எள்ளினால் ஆட்டப்படும் நல்லெண்ணைய் விலைக்கு விற்கப்படுகின்றது !!!

கேள்வி 2 : எள்ளுடன் வெல்லம் சேர்த்து ஆட்டுவது சிறந்ததா அல்லது கருப்பட்டி சேர்த்து ஆட்டுவது சிறந்ததா?
பதில்: வெல்லத்தை விட அதிக மருத்துவ குணம் கொண்ட கருப்பட்டி சேர்த்து ஆட்டுவதே மிகவும் சிறந்தது.

ஆனால், மொலாசிஸ் எனும் சர்க்கரை ஆலை கழிவு மற்றும் தரமற்ற வெல்லம் பயன்படுத்தி ஆட்டிய மரச்செக்கு நல்லெண்ணெயை  கருப்பட்டி சேர்த்து ஆட்டிய மரச்செக்கு நல்லெண்ணெயின் விலைக்கு  சந்தையில் விற்கப்படுகிறது.!!!!

கேள்வி 3: மரச்செக்கில் ஆட்டப்படும் கடலை எண்ணையில் தரம் உண்டா?
பதில்: ஆம் உண்டு. கடலையை உடைக்கும் போது அதில் கடைசியாக காய்த்திருக்கும் பிஞ்சு கடலையும் கலந்துவிடும். அந்த பிஞ்சு கடலையை நீக்கிவிட்டு முத்தியகடலயை மட்டும் கடலை மிட்டாய் செய்ய அனுப்புவார்கள். அதுவே மிட்டாய் கடலை எனப்படும். அந்த மிட்டாய் கடலையே முதல்தர கடலை. இவை விலை அதிகம். இந்த மிட்டாய் கடலையில் ஆட்டப்படும் கடலை எண்ணெய்தான் தரமான கடலை எண்ணெய்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் பிஞ்சு கடலை விலை குறைவு அதே சமயத்தில் எண்ணையும் அதிகம் கிடைக்கின்றது. அதனால் சந்தையில் கிடைக்கும் மரச்செக்கு கடலை எண்ணைய்களில் 90 சதவீதம் பிஞ்சு கடலைகளில் இருந்தே தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

கேள்வி 4: மரச்செக்கு தேங்காய் எண்ணையில் கலப்படம் உண்டா?
பதில்: நிச்சயம் உண்டு.  கொப்பரை எடுத்ததும் அதில் சல்பர் என்னும் வேதியல் பொருளை கலந்து வைத்துவிடுகின்றனர். அப்பொழுதுதான் தேங்காய் எளிதில் பூஞ்சை பிடித்து கெடாமல் இருக்கும். இந்த சல்பர் போடுபவர் கையை பார்த்தாலே தெரியும் கைகள் கொப்பளம் கொப்பளமாக காட்சியளிக்கும். மரச்செக்கில் செய்திருந்தாலும் சல்பர் போட்ட தேங்காய் எண்ணையை பயன்படுத்தினால் நிச்சயம் உடலுக்கு கேடுதான். சல்பர் போடாத தேங்காய் விலை அதிகம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

கேள்வி 5: செக்கு எண்ணெய் என்ற பெயரில் சந்தையில் கிடைப்பது மரச்செக்கு எண்ணெயா?
பதில்: இல்லை. செக்கு எண்ணெய் என்பது இரும்பு செக்கினால் ஆட்டப்படும் எண்ணெய். இரும்பு செக்கில் ஆட்டும்போது எண்ணெய் 360” டிகிரி சூடு ஏறும். அப்படி சூடாகும் எண்ணெயின் இயற்கையான சத்துக்கள் அழிந்து ஒரு பிசுபிசுப்பான திரவம் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

மரச்செக்கு எண்ணையில் உங்களுக்கு வேறு ஏதும் சந்தேகமிருந்தால் எங்களை அணுகுங்கள் விளக்கம் தருகிறோம்.

லாபம் மட்டும் எங்கள் நோக்கமல்ல, மக்கள் விழிப்புணர்வே எங்களின் முதல் லாபம்.

எங்கள் பட்டுக்கோட்டை ஒளவை மரச்செக்கு எண்ணெய் நிறுவனத்தில்,

1. சுத்தம் செய்யப்பட்ட கருப்பு எள்ளு மட்டும் மற்றும் அதனுடன் தரமான பனங்கருப்பட்டி மட்டுமே சேர்த்து ஆட்டப்படும் நல்லெண்ணெய்.

2. கடலைமிட்டாய் செய்ய பயன்படும் முதல் தரமான நிலக்கடலை பருப்பை மட்டுமே கொண்டு ஆட்டப்படும் கடலை எண்ணெய்.

3. சல்பர் கலக்காத, தேங்காயை உடைத்து வெயிலில் மட்டுமே காயவைத்த முதல் தரமான கொப்பரையை மட்டும் தேர்வு செய்து ஆட்டப்படும் தேங்காய் எண்ணெய் கிடைக்கும்.

4. தரமான பொருட்களை கொண்டு மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுவதால் எண்ணெய் சத்துள்ள தரமான கடலை, தேங்காய் புண்ணாக்குகள்  மற்றும் கறவை மாடுகளுக்கு கருப்பட்டி சேர்த்த எள்ளு புண்ணாக்கு கிடைக்கும்.

இது ஆடம்பர தேவைக்கான விளம்பரம் அல்ல  -  அத்தியாவசிய தேவைக்கான விழிப்புணர்வு.

வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிராம்பட்டினத்திற்கு இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.

மேலும் தகவல் பெற:
ஒளவை மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம்.
5, பாளையம் பேருந்து நிறுத்தம், பட்டுக்கோட்டை.
அலைபேசி:‭+91 80567 28870
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.