அதிரை நியூஸ்: மே 23
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவு இன்று புதன்கிழமை காலை வெளியானது. இதில் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 21 ஆவது இடம் பெற்றது. மாவட்டத்தில் மதிப்பெண்கள் 481க்கும் மேல் 189 பேர் பெற்றனர்.
2018 மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் நிதியுதவி பெறும் 401 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 589 மாணவர்களும், 16 ஆயிரத்து 698 மாணவிகளும் என மொத்தம் 32 ஆயிரத்து 287 பேர் எழுதினர். இதில் 15 ஆயிரத்து 422 மாணவர்களும், 16 ஆயிரத்து 161 மாணவிகளும் என மொத்தம் 31 ஆயிரத்து 583 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.97 சதவீதம், மாணவிகள் 96.78 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 94.88 சதவீதம் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 95.21 சதவீதம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட 0.33 சதவீதம் குறைந்துள்ளது.மாநில அளவில் 94.5 சதவீதம் பெற்று 21 ஆவது இடம் பெற்றுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக 38 மாணவர்கள், 151 மாணவிகள் என மொத்தம் 189 பேர் பெற்றுள்ளனர். 451 க்கு மேல் 480 வரை 489 மாணவர்கள், 1070 மாணவிகள் என மொத்தம் 1539 பேரும், 426 முதல் 450 வரை 716 மாணவர்கள், 1286 மாணவிகள் என 2002 பேரும், 401 க்கு மேல் 425 வரை 997 மாணவர்கள், 1607 மாணவிகள் என 2604 பேரும், 301 க்கு மேல் 400 வரை 5910 மாணவர்கள், 7081 மாணவிகள் என 12 ஆயிரத்து 991 பேரும், 201க்கு மேல் 300 வரை 6916 மாணவர்கள், 4876 மாணவிகள் என 11 ஆயிரத்து 792 பேரும், 176 க்கு மேல் 200 வரை 651 மாணவர்கள், 283 மாணவிகள் என 934 பேரும், 175 மற்றும் அதற்கு குறைவாக 892 மாணவர்கள், 344 மாணவிகள் என மொத்தம் 1236 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.