.

Pages

Saturday, May 19, 2018

காச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் பரிசோதனை வாகனம்!

பேராவூரணி மே.19
காசநோய் கண்டறியக்கூடிய நவீன கருவிகள் பொருத்தப்பட்ட நடமாடும் வாகனம் வெள்ளிக்கிழமை அன்று  பேராவூரணி வட்டாரத்திற்கு வந்தது. இந்த வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நவீன நடமாடும் காசநோய் கண்டறியும்  பரிசோதனை வாகனத்தை (CBNAAT) செருவாவிடுதியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் முன்னிலையில், மருத்துவ அலுவலர் டாக்டர் சிவரஞ்சனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் மருத்துவ அலுவலர் டாக்டர் கோகிலா, மாநில காசநோய் விளம்பர அலுவலர் எம்.மங்களேஸ்வரன், மாவட்ட காசநோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் செ.தனசேகர், மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் எம்.மாரியப்பன், காசநோய் முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் த.விஜயகுமார், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் வெ.விஜயகாந்த், மருந்தாளுநர் சரவணன், கண் சிகிச்சை மருத்துவ பரிசோதகர் திரவியம், அலுவலக எழுத்தர் கலைவாணி மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் கூறுகையில், 
"இந்த நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம், சளியில் உள்ள காசநோய் கிருமிகளை நவீன முறையில் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். தொடர் இருமல், பசியின்மை, எடைக்குறைவு, விட்டுவிட்டு காய்ச்சல் வருதல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் இதில் இலவசமாக  பரிசோதனை செய்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து செருவாவிடுதி, திருச்சிற்றம்பலம், இடையாத்தி பகுதிகளுக்கு இந்த நவீன பரிசோதனை வாகனம் சென்றது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.