.

Pages

Wednesday, May 16, 2018

பணக்காரியின் (?) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்ஹம், கையில் பணமாக 1.2 லட்சம் திர்ஹம் கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: மே 16
லெபனானின் பெய்ரூட் நகரில் 52 வயது பாத்திமா உத்மான் என்கிற பெண்மணி ஒருவர் தனது காரில் இயற்கையாய் இறந்த நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டார் அப்போது அவருடன் இருந்தது 120,000 திர்ஹம் மதிப்பிற்கான லெபனான் பணம் இருந்துள்ளது அத்துடன் அவரது பெயரில் 3 வங்கிக்கணக்குகளில் 4 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான லெபனான் பணமும் சேமித்து வைக்கப்பட்டிருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

அதனால் என்ன? இந்தப் பெண் செய்து வந்த தொழில் தெருவில் பிச்சை எடுப்பது, சொந்தமாக வீடு கிடையாது என்பதுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்ட காரிலேயே குடியிருந்தும் வந்துள்ளார். பிச்சை எடுத்து கோடீஸ்வரியான நிலையிலும் அவர் பண ஆசையால் கடைசி வரை பணக்காரியாக அல்ல ஒரு சராசரி வாழ்க்கை கூட வாழாமல் பிச்சைகாரியாகவே மரணத்தை தழுவியுள்ளார்.

இவர் பணக்காரியா இல்லை பிச்சைகாரியா?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.