தென்னக விமானப் பிரிவின் கீழ் இயங்கும் முதன்மைத் தளமான தஞ்சாவூர் விமானப்படை நிலையத் தளபதியாக அணித் தலைவர் பிரஜுல் சிங் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்பு நிலையத் தளபதியாக அணித் தலைவர் விக்ரம் ஜீத் சிங் இருந்து வந்தார். நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அணிவகுப்பு மரியாதைக்குப் பிறகு நிலையத் தளபதியாக பிரஜுல் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரஜுல் சிங் தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவர். இவர் 1992 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் சேர்ந்தார்.
தகுதி பெற்ற விமானப் பயிற்சியாளரான இவர் இயக்கம், நிர்வாகம் மற்றும் சூரியகிரன் விமான சாகச அணி என பல்வேறு பிரிவுகளில் அலுவலராகப் பணியாற்றியவர். ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தில் ராணுவ, விமானப் பிரிவு அலுவலராகவும் பணியாற்றினார். இவரது அர்ப்பணிப்பான பணிக்காக இவருக்கு 2012 ஆம் ஆண்டில் வாயு சேனா விருது வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.