.

Pages

Sunday, May 27, 2018

சவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு சூறாவாளி!

அதிரை நியூஸ்: மே 27
ஏமனின் சொகோற்றா தீவு மற்றும் ஓமனின் சாலாலா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள தோபார், சுர் போன்ற பல பிரதேசங்களையும் மழையாலும், வெள்ளத்தாலும், கடும் சூறாவளி காற்றாலும் புரட்டிப் போட்ட மெகுனு என பெயரிடப்பட்ட புயல் தற்போது பலமிழந்த நிலையில் சவுதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசத்தை நோக்கி செல்கிறது இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த புழுதிக்காற்றும் பலத்த மழையும் பெய்யும் என சவுதியின் வானிலை மையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது.

நேற்று அதிகாலை முதல் வீசிவரும் புயலால் ஏமனின் சொகோற்றா தீவில் கடும் சேதங்கள் விளைந்துள்ளன, படகுகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன, கடலுக்குள் சென்ற சுமார் 40 பேரை காணவில்லை, இவர்கள் அனைவரும் ஏமன், சூடான் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஓமனின் சலாலா நகரை துண்டாடிய சூறாவளியால் நகரெங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. சுமார் 10 பேர் வரை இறந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மின்சாரம் அடியொடு நிறுத்தப்பட்டுள்ளதால் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. உணவு மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களையும் இதர உதவிகளை மக்கள் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் பலமிழந்த சூறாவளி காற்று சவுதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது இதனால் சுமார் 75 கி.மீ வேகத்தில் பலத்த புழுதிக் காற்றும் மழையும் பெய்யும் என சவுதி வானிலை மையம் முன்னறிப்பு செய்துள்ளது. குறிப்பாக நஜ்ரான், அல் கர்கிர் மற்றும் ருப் அல் காலி எனப்படும் பலைவன பெருவெளி பிரதேசம் (Empty Desert Quartet) ஆகியவை பாதிக்கப்படக்கூடும். மேலும் அல் ஹாயில், மக்கா, மதினா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்.

ஜஸான் மலைப் பிரதேசம், அஸீர், மக்கா, மதினாவின் மலைப்பிரதேசங்கள், தபூக், அல் ஜோப் மற்றும் வட எல்லைபுற பகுதிகளிலும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும். இப்புயலின் தாக்கத்தால் அமீரகத்தின் சில பகுதியிலும் புழுதிக்காற்றும் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மெகுனு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஐஎன்எஸ் தீபக், ஐஎன்எஸ் கொச்சி என பெயரிடப்பட்ட 2 நிவாரணக் கப்பலை தேவையான உதவிப் பொருட்களுடன் வளைகுடா பிராந்தியத்தை நோக்கி அனுப்பியுள்ளது. ஓமன் அரசிடமிருந்து உதவி கோரப்படும் பட்சத்தில் களத்தில் இறங்கும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.