அதிராம்பட்டினம், மே 23
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். அக்கட்சியின், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மீனவர்கள், பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், தமிழக அரசை பதவி விலகக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்ட முடிவில், தஞ்சை தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் மல்லிபட்டினம் ரபீக் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ், தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா.அண்ணாதுரை, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சை மாநகரச்செயலாளர் டி.கே.ஜி நீலமேகம் ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் மு.காந்தி, பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில் குமார், மதுக்கூர் ஒன்றியச் செயலளார் இளங்கோ, பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், பேராவூரணி பேரூர் முன்னாள் சேர்மன் அசோக்குமார் உட்பட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
ஆதரித்த திமுக தோழமை கட்சியினர்...
ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திமுக தோழமை கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமையில் அக்கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் ஏ.ஷேக் அப்துல்லா தலைமையில் அக்கட்சியினர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.