அதிராம்பட்டினம், மே.26
பட்டுக்கோட்டை வட்டத்தில் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு பயன் புயல் பாதுகாப்பு மையங்களில் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக தமிழக அரசு கடலோர பகுதிகளில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களை அமைத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 7 மையங்களை தவிர்த்து, அனைத்து வசதிகளுடன் புதிதாக 14 மையங்கள் கட்டப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க அனைத்து மையங்களும் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதா என கண்டறிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.
இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நரசிங்கபுரம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு, ராஜாமடம் கீழத்தோட்டம், புதுப்பட்டினம், கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம், சின்னமனை ஆகிய இடங்களில் உள்ள புயல்பாதுகாப்பு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதில் புயல் பாதுகாப்பு மையங்கள் அனைத்து வசதிகளுடன் முறையாக, தயார் நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
ஆய்வின்போது பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி.சாந்தகுமார், மண்டல துணை வட்டாட்சியர் நல்லதம்பி, வருவாய் ஆய்வாளர் அன்புக்கரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மற்றும் வருவாய்துறையினர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.