.

Pages

Monday, May 28, 2018

பாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய தனி ஒருவன் (வீடியோ)

அதிரை நியூஸ்: மே 28
பிரான்ஸ், பாரீஸில் 4 வது மாடியின் பால்கனி தவறிவிழுந்து தொங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை தன்னுடைய பாதுகாப்பை பற்றி சிறிதும் கவலை கொள்ளலாம் சில நொடிகளில் 4 மாடிகளின் பால்கனிகளை வெறும் கை, கால்களின் துணையோடு தாவியேறி காப்பாற்றிய 22 வயது மாலி நாட்டின் இளைஞர் மொம்மோது (முஹமது) கஸ்ஸாமா என்ற அவரின் வீர தீர செயலுக்காக சமூக வலைதளவாசிகளால் வைரலாக பகிரப்பட்டு போற்றப்பட்டு வருகிறார்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் (அமீரக நேரம் இரவு 10 மணி) நடைபெற்ற போது பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து ஒருவர் குழந்தை வழுவிவிடாமல் பிடித்துக் கொண்டிருந்த போது கீழிலிருந்த மக்கள் கூட்டம் வெறும் அபாய சத்தமெழுப்பிக் கொண்டும், கார்களில் இருந்தவர்கள் ஹரான் அடித்துக் கொண்டும் உதவிக்கு பிறரை அழைத்துக் கொண்டிருந்த நிலையில் இவர் எதையும் யோசிக்காமல் காரியத்தில் உடனடியாக இறங்கியுள்ளார்.

குழந்தை தவறிவிழுந்து தொங்கியபோது அதன் தாய் பாரீஸிலேயே இல்லையாம் தந்தையோ குழந்தையை தனியே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார், இந்த செயலுக்காக தற்போது போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். தீயணைப்புத் துறை வருகை தந்த போது குழந்தை  மொம்மோது கஸ்ஸாமாவால் காப்பாற்றப்பட்டிருந்ததை கண்ட அவர்கள் 'அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு முன் துணிச்சலான, உடல் தகுதியுடைய ஒருவர் இருந்துள்ளார்' எனக் கூறினர் ஆனால் கஸ்ஸாமோவோ இது இறைவனின் உதவி என கூறினார்.

கஸ்ஸாமா சில மாதங்களுக்கு முன் தான் பிழைப்புத் தேடி பாரீஸ் வந்துள்ளார். இவரது வீர தீர செயலைப்பற்ற அறிந்த பாரீஸ் நகர மேயர் அன்னி ஹிடால்கோ மிகவும் அவரை பாராட்டியதுடன் நாட்டு மக்கள் கஸ்ஸாமா பிரான்ஸிலேயே தங்கி உழைத்து முன்னேற தேவையான செய்து தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய செய்தி: 
வீர தீர இளைஞர் கஸ்ஸாமாவுக்கு 'பிரான்ஸின் கௌரவ குடியுரிமை' வழங்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய வேலைவாய்ப்பிற்கும் பிரான்ஸின் நிரந்தர குடிமகனாவதற்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பாரீஸ் நகர  மேயர் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.