அதிரை நியூஸ்: மே 19
துபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவாகும் மேம்பால திட்டம் துவங்கியது.
துபையில் மிகவும் பிரசித்தி பெற்றது ஷிண்டாகா எனப்படும் கடலடி பாலம். இந்தப் பாலம் பழமையாகி வருவதையடுத்து இதை முற்றாக மூடிவிட்டு கடல் மேல் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது அவர்கள்.
சுமார் 394 மில்லியன் திர்ஹம் செலவில் உருவாகவுள்ள இந்தப்பாலம் ஷேக் ராஷித் சாலை மற்றும் அல் மினா இடையேயான 13 கி.மீ புதிய சாலையின் இணைப்பாக அமையும். இந்தப் பாலத்தின் நீளம் 295 மீட்டர். ஒவ்வொரு புறத்திலும் தலா 6 லேன்களை கொண்டிருக்கும். பாலத்தின் கீழ் பல்வேறு வகையான படகுகளும், கப்பல்களும் கடந்து செல்லும் வகையில் நீருக்கு மேல் 15.5 மீட்டர் உயரத்தில் அமையும்.
இந்த பால கட்டுமானத்திற்கு சுமார் 2,400 டன் இரும்பு உபயோகப்படுத்தப்படவுள்ளதுடன் இதன் மேல் அமைந்துள்ள 'இன்பினிட்டி' எனும் வளைவுகள் 42 மீட்டர் உயரத்தில் அமையும். இந்தப்பாலத்தின் இருபுறமும் நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக அதிரை நியூஸில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த செய்தியை வாசிக்க:
துபாயில் ஷிண்டாகா சுரங்கப்பாதைக்கு பதிலாக 12 வழி கடற்பாலம் !
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.