அதிரை நியூஸ்: மே 29
ஜித்தா புதிய விமான நிலையத்தில் இன்று முதலாவது விமானச் சேவை துவங்குகிறது.
ஜித்தாவில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக பிரம்மாண்ட விமான நிலையங்களில் ஒன்றான கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் இன்று அதிகாரபூர்வமற்ற முறையில் திறக்கப்படுவதையொட்டி (Soft Opening) முதலாவது உள்நாட்டு விமானச் சேவை துவங்குவதையடுத்து அல்குரையாத் (Al-Qurayyat) நகர விமான நிலையத்திலிருந்து வந்திறங்குகிறது.
ஜித்தா நகரின் வட திசையில் 19வது கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த புதிய ஜித்தா விமான நிலையம் அதிகாரபூர்வமாக எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் திறக்கப்பட்டு (Official Opening) உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சேவைகள் (Domestic & International Services) முழுஅளவில் மேற்கொள்ளப்படும் அதுவரை படிப்படியாக உள்நாட்டுச் சேவைகள் மட்டும் அதிகரிக்கப்பட்டு வரும்.
இன்று (மே 29) முதல் துவங்கும் பரீட்ச்சார்த்த உள்நாட்டு விமான சேவைகள் 2 நுழைவாயில்கள் வழியாக மட்டும் மேற்கொள்ளப்படும், அடுத்த வாரம் இது 6 நுழைவாயில்களாக அதிகரிக்கப்படும். இன்னும் இரு நுழைவாயில்களில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சேவைகள் துவங்கும்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.