.

Pages

Wednesday, June 3, 2020

அதிராம்பட்டினத்தில் கலைஞர் 97-வது பிறந்த நாள் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 03
இன்று ஜூன் 3 ந் தேதி திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 97-வது பிறந்த தினத்தையொட்டி, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி. ப. பாலசுப்பிரமணியன் திமுக கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திமுகவில் புதிதாக இணைந்த அதிராம்பட்டினம் பேரூர் 7-வது வார்டு ஏ.அப்துல் நாசருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகம், பேருந்து நிலையம் கிழக்கு கடற்கரைச்சாலை, பெரிய கடைத்தெரு, முத்தும்மாள் தெரு, பிலால் நகர், வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி, சுப்பிரமணியர் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.