.

Pages

Friday, March 14, 2014

காது கேளாத வாய் பேச இயலாத அதிரை மாணவன் சாதனை !

நமதூரைச்சேர்ந்த உமர்தம்பி மரைக்கா அவர்களின் மகன் ஜெஹபர் அலி அவர்கள் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பிகாம் பாடப்பிரிவில் முதல் தரத்தில் தேர்வாகி சாதனை புரிந்துள்ளார். இவர் அதிக மதிப்பெண்கள் பெற்ற அதிரையின் முதல் மாணவர் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளார். சமிபத்தில் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் இந்த மாணவனுக்கு பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

கல்வியில் தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ள இந்த மாணவருக்கு காது கேளாதது - வாய் பேச இயலாதது என்பது நமக்கு அதிர்ச்சியை தந்தாலும் இவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல் கல்வியில் சாதனை நிகழ்த்தியுள்ள இந்த மாணவனுக்கு அதிரை நியூஸ் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து மகிழ்கின்றது.

9 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இவரைப்போல் படித்து பாஸ் பண்ணுவது சாதனைதான் அதைவிட பெரிய சாதனை முதல்வகுப்பில் பாஸ் செய்தது.வாழ்த்துக்கள் .மென்மேலும் சாதனை புரிய துஆ செய்கிறேன்..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
    அதிராம்பட்டினம்-614701.

    ReplyDelete
  2. பாராட்டிற்குரியவர். தனது உடல் ரீதியான குறைபாடுகளால் மனம் தளராது தனது திறமையை கல்வி அறிவில் குறைபாடின்றி சாதனை புரிந்த இம்மாணவர் மேலும்பல சாதனைகள் புரிய வாழ்த்துவோம்.

    ReplyDelete
  3. என்னை போன்ற மாற்றுத்திறனாளியும் சாதிக்க முடியும் என்று இந்த உலகத்திற்கு நிருபித்து காட்டிய ஜஹபர் அலி,அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், தெரிவித்துகொள்கிறேன்.
    எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் குறிக்கோள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆகியவை இருந்தால் நாம் வெற்றியே தேடி போக வேண்டியதில்லை. வெற்றி நம்மை தேடி வரும்.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி... தலைப்பை மாற்ற முடியுமா?

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ். மென்மேலும் சாதிக்க அல்லாஹ் துணை செய்வானாக. ஆமீன்

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ்.. எல்லா புகழும் பெற்று மேலும் சாதிக்க மனங்கனிந்த வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்.. எல்லா புகழும் பெற்று மேலும் சாதிக்க மனங்கனிந்த வாழ்த்துக்கள்..!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.