.

Pages

Monday, March 17, 2014

மரைக்கா குளத்தில் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்திய அதிரை இளைஞர்கள் !

கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் அதிரையில் உள்ள குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு தரப்பினரின் பெரும் முயற்சியின் கீழ் சில குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதில் மரைக்கா குளமும் ஒன்று. இக்குளத்திற்காக கொண்டுவரப்பட்ட தண்ணீர் முழுமையாக நிரம்பவில்லை என்றாலும், இப்பகுதியில் வாழும் பெண்கள் இக்குளத்தை குளிப்பதற்காக பயன்படுத்தி வந்தனர்.

நாளுக்கு நாள் வறண்டு தண்ணீர் குறைந்து வரும் இக்குளத்தில் இன்று காலை தண்ணீரை எடுக்க வந்த டேங்கர் லாரியை இப்பகுதியில் வாழும் இளைஞர்கள் ஒன்றிணைந்து வழிமறித்து விரட்டிவிட்டார்கள்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் நம்மிடம் கூறுகையில்....
தண்ணீர் இல்லாமல் இப்பகுதியினர் மிகுந்த கஷ்டத்துகுள்ளாகி வரும் வேளையில் இன்று காலை வாட்டர் டேங் லாரியில் வந்த சிலர் அதிரையில் நடைபெரும் சாலை பணிக்கு எனக்கூறி மரைக்கா குளத்தில் தண்ணீரை எடுக்க முற்பட்டனர். தகவலறிந்த நாங்கள் தண்ணீரை நிரப்ப விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினோம். இதனால் தண்ணீர் எடுத்துச்செல்லும் அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை' என்றார்கள்.


7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Keetatha thaan kudukala koduthathai yum pidunga pakkuringale

    ReplyDelete
  3. தேர்தல் நேரத்தில் ரோடு போடுவதால் வரும் பிரச்சனை, இது அரசியல் வாதிகளின் சுயநலம், ரோடு போட தண்ணீர்க்கு எங்கே போவது? பொது நலன் கருதி இருப்பதில் கொஞ்சம் கொடுத்தால் ரோடு ரெடி இல்லையேல் இதை காரணம் காட்டி விட்டு விடுவார்கள் - பொது மக்களே மாத்தி யோசிங்க.

    ReplyDelete
  4. Athukkaka thanne kodukkanuma? Kaanrakt karar thutdu vagkurahala avagkaththan moya konduvaranum sar,

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வீட்டு வாசலில் யாராவது தண்ணீர் பைப் வைத்து இருக்கின்றீர்களா? ஜாக்கிரதை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  6. தேர்தல் நேரத்தில் ரோடு போடுவதால் வரும் பிரச்சனை, இது அரசியல் வாதிகளின் சுயநலம், ரோடு போட தண்ணீர்க்கு எங்கே போவது? பொது நலன் கருதி இருப்பதில் கொஞ்சம் கொடுத்தால் ரோடு ரெடி இல்லையேல் இதை காரணம் காட்டி விட்டு விடுவார்கள் - பொது மக்களே மாத்தி யோசிங்க...............west yaseen

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.