அதிரைக்கு வருகை தந்த அமைச்சர் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள், கடற்கரைதெரு முக்கியஸ்தர்கள், காந்தி நகர் பஞ்சாயத்தார், கரையூர் தெரு பஞ்சாயத்தார் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சந்திப்பின் போது அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள் 'மாமனிதர் நபிகள் நாயகம்' புத்தகத்தை வழங்கினார்கள். மேலும் ததஜ, மஹல்லா, பஞ்சாயத்து நிர்வாகிகள் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.
அமைச்சர் வைத்திலிங்கத்தை அதிமுக கட்சியின் நகர நிர்வாகிகள் அதிரையின் முக்கிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஒவ்வொரு இடமாக அழைத்துச்சென்றனர்.
வாழ்த்துக்கள்...................என் சமுதாய அமைப்புக்கள் எங்கே செல்கிறன?
ReplyDeleteநம் மக்கள் அமைச்சரிடம் மனு கொடுத்தப்போது கண்டு கொள்ளாத உத்தம புத்திரன், இப்போ நம் சமுதாய மக்களை பார்க்க ஓடோடி வருகிறார், புதியவருக்கு நாம் ஆதரவு கொடுத்து இவர்களுக்கு பாடம் புகட்டலாம், நடக்குமா?
ReplyDelete