.

Pages

Friday, March 28, 2014

பெட்டி வந்துருச்சாம்ல !?

பெட்டி : குறிப்பிட்ட பொருட்களை பாதுகாப்பதற்காக நாம் பெட்டிகளில் அடைத்து பாதுகாப்பது வழக்கமாக கொண்டிருந்தாலும், சூட்கேஸ் என ஆங்கிலத்தில் அழைக்கும் இவற்றை பலவகை பெயர்களில் நாம் அழைத்து மகிழ்வதுண்டு. இதில் பணத்தை பாதுகாக்கும் பெட்டிகளுக்கு சற்று மவுசு அதிகமாகவே காணப்படும். அதுவும் தேர்தல் நடைபெறும் காலங்களில் பயன்படும் பெட்டிகளுக்கு சொல்லவே வேண்டியதில்லை.

பாராளுமன்ற தேர்தலாகட்டும், சட்டமன்ற தேர்தலாகட்டும் அல்லது உள்ளாட்சி தேர்தலாகட்டும் இதில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர் சாத()ணத்தை பெட்டிகளில் வைத்துதான் பாதுகாப்பாக அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். பல்வேறு கட்டங்களாக பெட்டிகளை அனுப்பி விநியோகித்து வந்தாலும் உச்சகட்டமாக தேர்தல் நடைபெறும் முந்திய நாள் இரவில் ஆரவாரமில்லாமல் இவற்றை திறந்து பார்ப்பது கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

சரி விசயத்துக்கு வருவோம்...

இப்படி தேர்தலில் பங்குபெரும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒருவகையில் பயனைத்தரும் பெட்டியின் ( சூட்கேஸ் ) பயோடேட்டாவை சற்று நகைச்சுவையாக காண்போம்.

பெயர் : பெட்டி ( சூட்கேஸ் )
நிறம் : கருப்பு
அடையாளம் : இரவு நேரங்களில்
வயது : விநியோகிக்கும் வரை
நண்பர்கள் : கூட்டணி கட்சிகள், சாதி சமுதாய அமைப்புகள்
எதிரிகள் : தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படைகள்
பொறுப்பு : ஓட்டுகளை பெற நினைப்பது
எரிச்சலடைய வைப்பது : எனக்காக கோஷ்டிகள் மோதிக்கொள்வது
நிகழ்த்திய சாதனை : பதவிகளை பெற்று தருவது
கேட்க நினைப்பது : பெட்டிக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டோ !?

அபூ இஸ்ரா

3 comments:

  1. Maleaseya vemanam karuppu potde
    agkagkea erunthathu.
    s o l l a v e a e l l a

    ReplyDelete
  2. Potdenna annanukku rompa pureyam
    karuppu, vealla,pachchai

    manjppai, potdeya?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.