குவைத் பள்ளி (MASJID KUWAIT LOOTAH MASQUE) என்றழைக்கப்படும் இப்பள்ளி வாசலை துபை மற்றும் ஏனைய அமீரகப்பிரதேசத்தில் உள்ள நமதூர்வாசிகள் மற்றும் நமது தமிழ் சகோதரர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.காரணம் பெரும்பாலான தமிழர்கள் தொழுகைக்காகவும், நோன்பு திறப்பதற்க்காகவும் இப்பள்ளிவாசலைத்தான் நாடி வருவார்கள்.
இப்பள்ளியின் தனிச்சிறப்பு என்னவெனில் நோன்பு மாதத்தில் நோன்பு திறக்க வழங்கப்படும் இஃப்தார் உணவு நமது ஊர் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல இங்கு நோன்புக்கஞ்சி, வடை சமூசா, ஆரஞ்சுப்பழம், பேரித்தம்பழம் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகிறது. நோன்பு திறக்க தேவையான போதுமான உணவு வழங்கப்படுவதால் ஏனைய மாதத்தை விட நோன்பு மாதங்களில் இங்கு கூட்டம் நிரம்பி வழியும். தினமும் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் வரை இந்தப்பள்ளிக்கு வந்து நோன்பு திறந்து விட்டுச் செல்கின்றனர்.