.

Pages

Monday, June 16, 2014

அதிரை அருகே சுற்றுலா பயணிகள் பேருந்து மீது தாக்குதல் !

பொள்ளாச்சியை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 45 பயணிகள் ஆம்னி பேருந்தில் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வழிபாட்டை முடித்துக்கொண்டு இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

நேற்று இரவு பேருந்து தம்பிக்கோட்டை பகுதியில் வந்துகொண்டிருக்கும் போது முக்கூட்டுசாலையோர உணவு விடுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு  பயணிகள் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பயணிகளிடம் வாய் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் வாய் தகராறு முற்றியதில் வாகனத்தின் கண்ணாடிகளை கட்டைகளால் தாக்கி நொறுக்கியுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்துள்ளது.

இதைதொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் வாகனத்தை தானாக ஓட்டிச்சென்று தாமரங்கோட்டை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை  டிஎஸ்பி செல்லபாண்டியன தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். சேதமடைந்த ஆம்னி பேருந்து அதிரை காவல் நிலையம் முன்பாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



4 comments:

  1. இவங்களை திருத்தவே முடியாது, காலத்துக்கும் கலவாண்டு திண்டே பழக்க முடையவர்கள், சில நாட்கள் முன்பு கேரளா வண்டியை முற்றுகை இட்டு குழப்பம் செய்தார்கள், சில நாட்களுக்கு முன்பு சேன்டாக்கோட்டையில் வழிமறித்து குழப்படி செய்தனர்.

    இவர்களை என்ன செய்வது, காவல் துறைகள் எதுக்கு இருக்கின்றனர்?

    ReplyDelete
  2. பார்த்து கொன்டு இருப்பார்கள் பிறகு அறிவிக்கப்பபடும் தீவிர விசாரனை நடத்தப்படுகிறது என்று அறிவிக்கப்படும்.Then after some day's chapter closed. then happened new like bus broken found.

    ReplyDelete
  3. ஒரு நாடு, மாநிலத்துக்கு வருமானம் தரக்கூடியது சுற்றலா துறை தான், இங்கே இருக்கும் சமூக விரோதிகள் செய்யும் அட்டூழியத்தால் வெளிநாட்டினர் இந்தியா வர அஞ்சுகின்றனர்.

    சுற்றலாவினரை தாக்குவது, திருடுவது, கொலை செய்வது ,பாலியல் பலாத்காரம் செய்வது எல்லா கருமமும் நடந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததால் பெருகிக்கொண்டே வருகிறது.

    குற்றங்கள் குறைய வேண்டுமென்றால், தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். நம் நாட்டில் குற்றங்கள் பெருகி வர காரணமே, குற்றங்களுக்கு பொருத்தமான தண்டனைகள் இல்லாமல் இருப்பது தான்.

    நிறுதிருக்கும் ஆம்னி பஸ் பலமாதங்கள் இங்கே இருக்க போவதை பார்க்கலாம் - அப்படிவொரு நடவடிக்கை!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.