.

Pages

Thursday, June 12, 2014

குற்றாலாத்தில் களைகட்டிய சீசன் ! அதிரையர்கள் படையெடுப்பு !!

ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலே குளுமையை விரும்புவோரின் நினைவுக்கு வருவது குளு குளு குற்றாலம்தான். ஆகஸ்ட் மாதம் இறுதிவரை ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் குவியும் ஒரே இடமாகத் திகழ்வது குற்றாலம் மட்டுமே.

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் உறவாடிக்கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இச்சாரல் விழும் இக்காலகட்டத்தைக் 'குற்றால சீசன்' என அழைப்பார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. வறண்டு கிடந்த அருவிகளில் பரவலாக தண்ணீர் விழத்துவங்கின. இதனால் வானம் கருமேகமூட்டத்துடன் ஆங்காங்கே காணப்படுகின்றன.

இங்குள்ள பல்வேறு அருவிகளில் குறிப்பாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்வதற்காக அதிரையர்கள் படையெடுத்து செல்கின்றனர்.





20 comments:

  1. அருவி நீரைப் பார்த்ததும் குற்றாலக் குளியல் போட ஆசையாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  2. அஸ்ரஃப் காக்கா குற்றாலத்திற்கு சென்றது குற்றாலத்திற்கே பெறுமைதான்

    ReplyDelete
  3. Well,looking good and nice.Iam seeing there real friendship as like brotherhood .INSHAALLAH this season could be blossom shower in KUTRAALAM.

    ReplyDelete
  4. குற்றால சீசன் வந்திடிச்சா, வருஷா வருஷம் நண்பர்கள் கூட்டம் நண்பிகள் கூட்டம் அலைமோதும், இதில் குளித்தால் ஒன்றுமே செய்யாதாம் அவ்வளவும் மூலிகையில் பட்டுவருகின்ற தண்ணீராம்.

    சிரமப்பட்டு பணம் சம்பாதித்து, அந்த பணத்தை செலவு செய்து பலபேர்கள் குற்றாலம் போயிட்டு வருவார்கள். சிலர் ஜால்ரா அடித்தே அடுத்தவன் காசில் குளிகாய்வனும் உண்டு. நான் சுட்டிக்காட்ட வில்லை, இப்படி நடக்குதா இல்லையா? அதைமட்டும் பாருங்க.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    ஆண்கள் திறந்த மேனியை பெண்கள் பார்ப்பதும் பெண்கள் மேனியை ஆண்கள் பார்ப்பதும் நமது இஸ்லாமிய மார்கத்தில் ஹராம்.
    இதுபோல் முன்பு தங்களின் இணையதளத்தில் திறந்த மேனியில் ஆண்கள் குளிப்பதை பதிந்ததை மீண்டும் நினைவு படுத்துகிறோம். நமது மின்னூட்ட செய்திகளை பெண்களும் பார்ப்பதால் திறந்த மேனியுடன் பதியப்பட்ட புகைப்படத்தை அல்லாஹுக்காக்கு பயந்து உடனடியாக நீக்கும்படி அதிரை நியூஸ் குழுவை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அழைக்கும்
    அந்நிய ஆண்கள் திறந்த மேனியை பெண்கள் பார்ப்பதும் அந்நிய பெண்கள் மேனியை ஆண்கள் பார்ப்பதும் நமது இஸ்லாமிய மார்கத்தில் ஹராம்.
    இதுபோல் முன்பு தங்களின் இணையதளத்தில் திறந்த மேனியில் ஆண்கள் குளிப்பதை பதிந்ததை மீண்டும் நினைவு படுத்துகிறோம். நமது மின்னூட்ட செய்திகளை பெண்களும் பார்ப்பதால் திறந்த மேனியுடன் பதியப்பட்ட புகைப்படத்தை அல்லாஹுக்காக்கு பயந்து உடனடியாக நீக்கும்படி அதிரை நியூஸ் குழுவை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  7. அதிரை மடல் அவர்களின் கருத்தே என்னுடைய கருத்தாகும் நம் அதிரையில் பெரும்பாலான பெண்கள் நமது அதிரையில் நிகழும் நற்செயல்களை அறிய நமது இணைய தளத்தை நாடுகிறார்கள் ஆகையால் தயவுகூர்ந்து அல்லாஹுக்காக தயவுடன் ஏற்றுக்கொண்டு உடனடியாக திறந்த மேனி புகைப்படத்தை நீக்குமாறு அதிரை நியூஸ் நர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  8. அதிரை மடல் அவர்களின் கருத்தே என்னுடைய கருத்தாகும் நம் அதிரையில் பெரும்பாலான பெண்கள் நமது அதிரையில் நிகழும் நற்செயல்களை அறிய நமது இணைய தளத்தை நாடுகிறார்கள் ஆகையால் தயவுகூர்ந்து அல்லாஹுக்காக தயவுடன் ஏற்றுக்கொண்டு உடனடியாக திறந்த மேனி புகைப்படத்தை நீக்குமாறு அதிரை நியூஸ் நர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  9. குற்றால சீசன் தொடங்கிடுச்சா.. ஆஹா. நாமளும் போகணும்,,இன்ஷா அல்லாஹ்,,

    எத்தனையோ புகைப்படங்களை ஏதேதோ தளங்களில் பார்த்து வரும்போது குற்றாலத்தில் குளித்த புகைப்படங்களை வெளியிடுவதில் தவறில்லை.. அஷ்ரப் பாய் கலக்குங்க,,,!

    ReplyDelete
  10. குற்றால சீசன் ஆரம்பிச்சுடுச்சா,, ஆஹா..,

    கருத்துக்களை சொந்த பெயரில் வெளியிடலாமே..ஏதேதோ புகைப்படங்கள் வரும்போது இந்த புகைப்படத்தில் தவறேதும் இல்லை,.

    கலக்குங்க அஷ்ரப் பாய்

    ReplyDelete
  11. good good jafar bai valltukal ungaludaya commens ku

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அழைக்கும்
    அந்நிய ஆண்கள் திறந்த மேனியை பெண்கள் பார்ப்பதும் அந்நிய பெண்கள் மேனியை ஆண்கள் பார்ப்பதும் நமது இஸ்லாமிய மார்கத்தில் ஹராம்.
    இதுபோல் முன்பு தங்களின் இணையதளத்தில் திறந்த மேனியில் ஆண்கள் குளிப்பதை பதிந்ததை மீண்டும் நினைவு படுத்துகிறோம். நமது மின்னூட்ட செய்திகளை பெண்களும் பார்ப்பதால் திறந்த மேனியுடன் பதியப்பட்ட புகைப்படத்தை அல்லாஹுக்காக்கு பயந்து உடனடியாக நீக்கும்படி அதிரை எக்ஸ்பிரஸ் குழுவை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  13. வாசகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் இந்த பதிவில் ஏற்றப்பட்டுள்ள சில புகைப்படங்கள் நீக்கம் செய்யப்படுகிறது.

    நன்றி !

    ReplyDelete
  14. என்னையா நடக்குது இங்கே...
    அவனவன் பாத்ரூம் போனது ,,, அரை நிர்வாணமாக குளிக்கிறது,,, எல்லா எழவையும் செய்தின்னு போட்டு தளத்தின் தரத்தை இழக்கின்றீர்கள். சமீப காலமாக இதுபோன்ற உப்பு சப்பு இல்லாத செய்திகளும், தனிநபர் புகழ்ச்சி செய்திகளும் அதிகளவாக பதியப்பட்டு வருகிறது.

    அதிரை எக்ஸ்பிரஸ், அதிரையில் உள்ள மற்ற செய்தி தளங்களை விட முதலும் முதன்மையான தளமாகும். தளத்தை நிர்வகிப்பதில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். கந்தூரி போன்ற அனாச்சாரமான நிகழ்சிகளின் புகைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற கொள்கை முடிவுடன் முகப்பில், சிவப்பு கலரில் அறிவிப்பு வெளியிடுகின்றீர்கள் , மிகவும் வரவேற்க கூடியதாகும், ஆனால் இது?

    அவரவர்கள் தங்களது சுற்றுலா போட்டோகளையும், அதிரையிலிருந்து யாருமே போகாத / போகமுடியாத குற்றாலம் போன்ற இடங்களுக்கு போய்வந்த செய்திகளை எல்லாம் தனியாக ஒரு BLOG தொடங்கி அதில் போட்டு பெருமை பட்டு கொள்ளவும்.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அழைக்கும்
    எங்களது வேண்டுகோளை ஏற்று சர்சைகூரிய புகை படத்தை நீக்கிய அதிரை நியூஸ்சிற்கு எனது மனமார்ந்த நன்றி இனியாவது தங்களை திருத்திக்கொள்ளுங்கள் இதொபோன்று பலமுறை எத்தனையோ சர்சைகூரிய புகைப்படத்தை பதிந்து அனைத்து வாசகர்களின் சர்சைக்கூரிய கருத்துக்கு ஆளாகிவிட்டு ஓர் இரு நாள்கழித்து //வாசகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் இந்த பதிவில் ஏற்றப்பட்டுள்ள சில புகைப்படங்கள் நீக்கம் செய்யப்படுகிறது.// என்று இப்படியொரு கருத்தை போடுவது ஊடக தருமத்திர்க்கே ஒரு மாபெரும் மானக்கேடாக தெரியவில்லை
    இனியாவது அல்லாஹ்விற்கு பயந்து நமது வலைதளத்தை ஷைத்தானிய பதிவை பதிவதை விலக்கிக்கொள்ளுங்கள் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களை மன்னித்து தங்களது சொல் செயல் என்னகம் ஆகிய அனைத்திலும் அல்லாவை பயந்துகொண்டு மறுமைநாளில் நம் அனைவையும் சொர்கத்தில் ஓன்று சேர்ப்பானாக ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.