இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்கில் திறக்கப்படாமல் இருந்துவந்தது. அவ்வப்போது பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கைகளையும் வைத்தவண்ணம் இருந்தனர் .
இந்நிலையில் அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் லத்தீப் அவர்களின் முயற்சியின் கீழ் இன்று மாலை பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்த சுகாதார வளாகத்தை அதிரடியாக பூட்டை உடைத்து மின்இணைப்பு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. சுகாதார வளாகத்தின் மின் விளக்குகள் அனைத்தும் பழுதுகள் சரிசெய்யப்பட்டு எரியவிடப்பட்டன. வாட்டர் டேங்கில் தண்ணீர் நிரப்பப்பட்டது.
நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருந்துவந்த சுகதாரா வளாகம் இன்று திறக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இப்பவாது அந்த பூட்டை உடைதீர்ஹலே நல்லதொரு முயற்சி செய்தீர்கள் லத்தீப் நானா அவர்களே வாழ்த்துக்கள்.............
ReplyDeleteஅது காஸ்ட்லியான பூட்டா?
ReplyDeleteபொது மக்களுக்காக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியம் தான்-
ReplyDeleteமற்ற இடங்களிலும் கட்டப்பட்டு இதே நிலைமைதான் இப்படி இருக்கையில் இதன் பராமரிப்பு எப்படி இருக்கும்? பயன்பாட்டர்களே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் இல்லையேல் பன்றிகளின் இருப்பிடமாகும் அதோடு சமூக விரோதசெயல்கள் நடக்கும் கூடாரமாக மாறிவிடும். ,
பட்டுக்கோட்டை பஸ்ஸ்டாண்டில் நிற்கும்போது கப் அடிக்குமே அதே போல் இதையும் மாற்றிவிடாதிங்க மக்களே!