.

Pages

Saturday, June 28, 2014

துபாயில் நடைபெற்ற TIYAவின் ஆலோசனைக் கூட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

அன்புடையீர் :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த வெள்ளிக்கிழமை 27.06.2014 அன்று மாலை 6.30மணிக்கு சகோதரர் ( நூவன்னா ) அவர்கள் இல்லத்தில் அமீரக TIYAவின் நிர்வாகிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் மீடியாகுழு உறுப்பினர்கள் ஆலோசனைக்குழு கூட்டம் சகோதரர் S.M. முனாப் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

விவாதிக்கப்பட்டவை : 
1. பித்ரா வசூல்
2. இஃப்தார் நிகழ்ச்சி
3. இந்த ஆண்டுகான கல்வி உதவி திட்டம்

கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் நமது மஹல்லா சகோதரர்களின் இல்லங்களுக்கு சென்று பித்ரா நிதி திரட்டுவது என தீர்மாணிக்கப்பட்டது.

கடந்த வருடம் செய்த்து போன்று இந்த வருடமும் நமது இப்தார் நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்வது. கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் ஒரு மஹல்லாவிற்க்கு 3 மூன்று பேர்கள் விதம் அழைப்பு விடுப்பது, இந்த செலவின்ங்கள் அனைத்தும் TIYAவின் நிதியிலிருந்தே செய்வது என தீர்மானிக்கப்பட்ட்து.

இந்த கல்வி ஆண்டு கான உதவி திட்டத்தின் கீழ் சுமார் 50 மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கப்பட்டது. சுமார் 22 மாணவ மாணவிகளுக்கு ஒர் ஆண்டுக்கான கல்வி கட்டணம் மற்றும் சீறுடைகள் வழங்கப்பட்டதையும் தெரிவிக்கப்பட்டது. இன்னும் பல நல்ல திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது அவை முடிவடைந்ததும் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வருகின்ற 18.07.2014 வெள்ளிக்கிழமை அன்று TIYAவின் இப்தார் நிகழ்ச்சி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது இடம் கடந்த வருடம் வைத்த அதே இடம் எனவும் இதில் எதேனும் மாற்றம் இருந்தால் முறையாக ஒரு வாரத்திற்க்கு முன்பு அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

மேற்கண்ட நிக்ழ்வுடன் அமீரக TIYA கூட்டம் இனிதே நிறைவுற்றது.

என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகிகள்





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.