.

Pages

Sunday, June 15, 2014

அதிரையில் விற்பனைக்கு வந்த 1.5 கிலோ எடையுள்ள சம்பா நண்டு !

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடல்களில் சம்பா நண்டுகள் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன.  மருத்துவ குணம் கொண்ட இவ்வகை நண்டுகள் 500 கிராம் முதல் 1500 கிராம் வரை எடையளவில் காணப்படுகிறது. மிகவும் சுவையாக இருக்கும் சம்பா நண்டுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்று காலை அதிரை கடைத்தெரு மார்கெட்டில் விற்பனைக்காக வந்த சம்பா நண்டுகளை வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர்.
 
சம்பா நண்டு குறித்து மீன் வியாபாரி மொய்தீன் நம்மிடம் கூறியதாவது...
'சர்வேதச மார்க்கெட்டில் நல்ல விலை போக கூடிய சம்பா நண்டுகள் கடலோர காடுகள் உள்ள இடங்களில் தான் அதிகமாக பிடிக்கப்படுகின்றன.   தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பிடிக்கப்படும் சம்பா நண்டுகள் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற இடங்களில் உள்ள உயர்தர உணவு விடுதிகளில் பரிமாறப்படுகின்றன. உள்ளூர் வியாபாரிகள் கிலோ ரூ 1000 வரை விற்பனை செய்கின்றனர்' என்றார்.

2 comments:

  1. நண்டு - நன்றாக மெண்டு(று) சாப்பிடணு 'மென்று ' நண்பர்கள் சொன்னார்கள் .

    நண்டை நன்றாக சாப்பிட ஒரு 'லாவகம் ' வேண்டுமாமே ?!

    அதிருக்கட்டும்ம்ம்ம் .....'லாவகமா?' 'லாகவமா ?'-
    ஜித்தா தமிழ்ச் சங்க ஆசாத் பாயிக்கே வெளிச்சம்!

    ReplyDelete
  2. எல்லா நண்டையும் கட்டவிழ்த்து விடனும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.