.

Pages

Monday, June 16, 2014

வில்லங்க சான்று விவரங்களை இணையதளத்தில் கட்டணமின்றி பார்வையிடும் வசதி !

பதிவுத்துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங் கச் சான்று விவரங்களை பொதுமக்கள் எவ்விதக்  கட்டணமுமின்றி   இணையதளத்தில் பார்வை யிடும் வகையில் ரூ. 58 லட் சத்தில்   ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதள வசதியையும் முதல்வர் ஜெயலலிதா   துவக்கி வைத் தார்.

எப்படி பார்வையிடுவது?
வில்லங்க சான்று விவரங்களை பொதுமக்கள் பார்வையிட, முதலில்  தமிழக அரசின் பதிவுத்துறையின் இணையதளமான  www.tnreginet.net க்கு செல்ல வேண்டும்.  இணையதளத்தின் இடதுபுறத்தில் ‘வியூ ஈசி’ என்ற ஆப்சன் இருக்கும்.  அதனை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தவுடன் எந்த ஏரியாவில்  டாக்குமென்ட் உள்ளது, சான்றிதழ் பதிவு செய்த நாள் போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதில் சரியான விவரங்களை டைப் செய்ய வேண்டும்.  பின்னர், அதில் கேட்கப்படும் குறியீட்டினை டைப் செய்தால் போதும். சிறிது நேரத்தில் விவரங்களை எந்தவித  கட்டணமின்றி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

4 comments:

  1. பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் வில்லங்கம் இவைகள் சரிபார்க்கபட்டபோதும் ஒரு சொத்து வாங்க தீர்மானித்து இந்து சகோதரர் ஒருவரின் சொத்திற்கு அவரின் ஒப்புதலில் பேரில் கிரயம் பேசி முன் தொகை கொடுக்கப்பட்டு கிரய பத்திரம் பதிவு செய்ய சொத்தின் மதிப்பு தொகையும் கொடுத்தாகி விட்டது .

    ஆனால் இந்து சமுதாய சட்டப்படி தாத்தாவின் சொத்துக்கு பேரன் உரிமை கொண்டாலாம் என்பதால் பேரன் வழக்கு தொடர எங்கள் குடும்பத்தின் கோடிகள் இன்று முடங்கி கிடக்கின்றன ......மாற்று மதத்தினரிடம் சொத்து வாங்கும் அதிரையர்களே ....மதத்திற்கு மதம் மாறுபடும் இந்திய சாசன சட்டத்தை தீர விசாரித்து செயல்படவும் .

    ReplyDelete
  2. இதுக்கு நான் பின்னூட்டம் இட்டால் அது வில்லங்கமாக மாறி விடும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.