.

Pages

Saturday, June 21, 2014

குடிநீர் கேட்டு பிலால் நகர் பெண்கள் திடீர் சாலை மறியல் !

ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு எல்லைக்குட்பட்ட பிலால் நகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரம் காலமாக குடிநீர் வழங்கபடாததை கண்டித்து இன்று காலை அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் உட்பட பொதுமக்கள்  காலி குடங்களுடன் பிலால் நகர் ஈசிஆர் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முத்து கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர் சித்திக் ஆகியோர் பிலால் நகர் பகுதிக்கு குடிநீர் சீராக வழங்கப்படும் என்ற உறுதியை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.






3 comments:

  1. இதற்கு காரணம் பிலால்நகர் பேராவுரணி வட்டதில் வருவதால் இந்த தொகுதியை அந்த மாவட்ட MLA கண்டு கொள்வதில்லை இதில் ஒரு மழை பெய்தாலும் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்க படுகிறனர் இத்தனை ஆண்டு காலம் இந்தபகுதி மக்கள் படும் கஷ்டங்களை பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த அரசு ஒரு நல்ல தீர்வு எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்...மேலும் இந்த பகுதியை அதிராம்பட்டினம் ஊராட்சி உடன் இணைத்தால் தீர்வு கிடைக்கும்....

    ReplyDelete
  2. அதிகாரிகள் வாக்கு கொடுத்தாலும் மழை இல்லை, நிலத்தடி நீர் இல்லை, தண்ணீர் எப்படி வரும்?

    ReplyDelete
  3. //அதிகாரிகள் வாக்கு கொடுத்தாலும் மழை இல்லை, நிலத்தடி நீர் இல்லை, தண்ணீர் எப்படி வரும்?//

    மின்னல் மின்னலாக இருந்தால் மழை நிச்சயம் வரும் ........அது மாறாக புரட்சி மின்னலாக இருக்கும் பட்சத்தில் மழை எப்படியப்பாவரும் ?????

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.