.

Pages

Wednesday, June 11, 2014

பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் தேங்கி நின்ற கழிவு நீரை அப்புறப்படுத்திய ஊழியர்கள் !

"11 வது வார்டிற்கு உட்பட்ட பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடமான தீன் மெடிக்கல் அருகில் அரசு மருத்துவமனை முதல் திலகர் தெரு கடைசி ஈ சி ஆர் சாலை சந்திப்பு வரை உள்ள சாக்கடை பல வருடங்ளாக தூர் வாரப்படாமல் தூர்ந்து போய் அனைத்து கழிவு நீரும் நான்கு வழி சாலை சந்திப்பில் வெளியேறி போக்குவரத்திற்கு இடையூராகவும் தொற்று  நோய் பரவும் அபாயத்தில் உள்ளது. இதனை பேரூராட்சியின் கவனத்திற்கும் வார்டு உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று எந்தவித நடவடிக்கையும் இல்லை." என மின்னஞ்சலில் கடந்த [ 08-06-2014 ] அன்று வந்த புகாரை அடுத்து அதிரை நியூஸில் பதிவிடுவதற்கு முன்பு கடைபிடிக்கும் வழக்கமான ஒன்றாகிய சம்பந்தப்பட்ட பிரதிநிதியை நேரடியாக சந்தித்து வலியுறுத்துவதை பின்பற்றினோம். அதன்படி இன்று கழிவு நீர் தேங்கி காணப்படும் வாய்க்கால் தூர்வாரப்பட்டு கழிவு நீர் சீராக வெளியேற வேண்டிய பணிகளை அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டனர்.

செய்தி தொகுப்பு : இப்ராஹிம் அலி


கழிவு நீர் தேங்கி காணப்படும் காட்சி 






3 comments:

  1. 10 நாளா இந்தப்பக்கம் போவவே முடியலே, இன்னைக்குதான் அவங்களுக்கு தெரிந்ச்சிதாக்கும். இதுமாதிரி அந்தப்பக்கமும் இருக்கு போய் பாருங்க.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ஊர் முழுக்க வெப் கேமெரா வைத்து, பேரூர்ராட்சி அலுவலகத்தில் பார்க்கும்படி வைத்தால் இது மாதிரி குறைகள் உடனுக்குடன் கவனிக்கப்படும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. //ஊர் முழுக்க வெப் கேமெரா வைத்து, பேரூர்ராட்சி அலுவலகத்தில் பார்க்கும்படி வைத்தால் இது மாதிரி குறைகள் உடனுக்குடன் கவனிக்கப்படும்.//

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.