இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும், மதுக்கூர் அணியும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2 கோல் அடித்து அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்றனர். AFFA அணியின் நட்சத்திர வீரர்கள் லோட்டஸ் நெய்னா, அசரப் ஆகியோர் தலா 1 கோல் அடித்து தனது அணி இலகுவாக வெற்றிபெற உதவியாக இருந்தனர்.
இதை தொடர்ந்து இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. இதில் பிச்சினிக்காடு அணியினரும், பட்டுக்கோட்டை அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4 கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றி பெற்றனர்.
முன்னதாக இன்றைய முதல் ஆட்டத்தை கடற்கரை தெரு ஜமாஅத் நிர்வாகிகள், அதிரை பீச் பாய்ஸ் மற்றும் SSMG நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்
இன்றைய ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் அஜீஸ் தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக செய்யது புகாரி சிறப்பாக கையாண்டார்.
இன்றைய முதல் நாள் ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகைதந்து ரசித்தனர்.
நாளைய ஆட்டமாக அதிரை பீச் பாய்ஸ் அணியினரும், பட்டுக்கோட்டை அணியினரும் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
AFFA அணி அடுத்த போட்டியிலும் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி... காணொளி எடுத்து பதிவிட வாய்ப்பிருந்தால் பதிவிடுங்கள்.... ஐடிஐ க்ரவுண்ட் பந்துமேட்ச்சாம்... மறக்கவே முடியாத டயலாக்...:)
ReplyDeleteCongrax guys............
ReplyDelete