.

Pages

Thursday, June 26, 2014

அதிரை உள்ளிட்ட கடலோரப்பகுதியில் 'ஆபரேஷன் ஹம்லா' ஒத்திகை நிகழ்ச்சி !

கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் குறைகளை கண்டறியவும் ஆண்டு தோறும் இருமுறை 'ஆபரேஷன் ஹம்லா' என்ற பெயரில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஆபரேஷன் ஹம்லா ஒத்திகை நேற்று காலை முதல் துவங்கியது.

தஞ்சை மாவட்டம் அதிரை, சேதுபாவாசத்திரம் கடலோரப்பகுதியில் டிஐஜி சஞ்சய் குமார் மேற்பார்வையில் எஸ்பி தர்மராஜன் தலைமையில் பட்டுகோட்டை டிஎஸ்பி செல்லபாண்டியன், அதிரை இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆனந்த், சேதுபாவ சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேராவூரணி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் 20 சப் இன்ஸ்பெக்டர்கள் 130 ஆயுதபடை காவலர்கள் உட்பட போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

கடலோர காவல்துறையினர் மற்றும் இந்திய கடற்படையினர் தனித்தனியாக படகுகளில் சென்று மீனவர்களிடம் அடையாள அட்டை மற்றும் படகு பதிவு புத்தகங்கள் உள்ளதா, சந்தேகத்திற்கிடமான வகையில் படகுகள் செல்கிறதா என சோதனையிட்டனர். கிழக்கு கடற்கரைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஒத்திகை பணிகள் இன்று மாலை வரை நீடிக்கும்.     

1 comment:

  1. ஹம்லா இது என்ன வடமொழியா அல்லது தமிழ் மொழியா.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.