.

Pages

Friday, June 20, 2014

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி : 11 வது வார்டில் டேங்கர் வாகனத்தில் குடிநீர் விநியோகம் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பட்டால் அந்த பகுதியின் வார்டு உறுப்பினர் அன்சர்கான் அப்பகுதி மக்களுக்கு டேங்கர் வாகனத்தின் மூலம் இன்று பகல் குடிநீரை விநியோகித்தார். அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள் காலிகுடங்களை எடுத்து வந்து குடிநீரை பெற்றுச்சென்றனர்.

இதுகுறித்து 11 வது வார்டு உறுப்பினர் அன்சர்கான் நம்மிடம் கூறுகையில்...
'கடந்த சில வாரங்களாக எங்கள் பகுதிக்கு பேரூராட்சியின் மூலம் வழங்கிவரும் குடிநீர் போதுமானதாக தரப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வந்தனர். இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தனியார் வாகனத்தின் மூலம் குடிநீரை விநியோகிக்க, ஒரு டிரிப் ரூபாய் 1500 செலவில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கி வருகிறோம்' என்றார்.




1 comment:

  1. சகோ ..அன்சார்கான் அவர்களுக்கு .............புரிகிறது உங்களின் ஆதங்கம் .......ஆனால் நாம் எவ்வளவு காலம் இவைகளை நாமாகவே செய்யமுடியும் ?

    முறையாக ஊர் கமிட்டியில் கூடி கருத்து வேறுபாடு இல்லாத ஒற்றுமை உணர்வுடன் அரசு சலுகைகளைபெற முயற்சி செய்யவும் ...அந்த வல்ல நாயன் துணையுடன் ....ஆமீன் ......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.