மதுரை, ஜூன்.18-
மல்லிப்பட்டினம் மோதல் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தை சேர்ந்தவர் ஹபீப் முகமது. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
மல்லிப்பட்டினம் கலவரம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட கருப்பு என்ற முருகானந்தம் மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ‘திடீர்‘ மோதல் ஏற்பட்டது. இதில், அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த எந்திரப்படகு தீ வைத்து கொளுத்தப்பட்டது. முகமது மரைக்காயர் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் சூறையாடப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. மறுநாளும் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த மோதல் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் 22 பேர் மீது சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், நாங்கள் கொடுத்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிவிசாரணை
எனவே, மோதல் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை கொண்ட குழு அமைத்து உத்தரவிடவேண்டும். சேதப்படுத்தப்பட்ட படகு, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இந்த இழப்பீடு தொகையை கருப்பு முருகானந்தம், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நோட்டீசு
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சி.எம்.ஆறுமுகம், முகமது அப்பாஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
நன்றி : தினத்தந்தி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.