இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ள தராவீஹ் தொழுகையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்சிகளிலும் பங்குபெற ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடப்பட்டு வருகிறது.
அறிவிப்பை தொடர்ந்து அதிரையில் உள்ள அனைத்து மஸ்ஜித்களும், வீடுகளும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. சஹர் உணவை தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக வர்த்தக நிறுவனங்களில் குறிப்பாக இறைச்சிகடைகள், காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்டவற்றில் இங்குள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.
நகரில் முக்கிய பகுதிகளின் பிராதன சாலைகள் பரபரப்பாக காணபபடுகின்றன. அதிரை மக்கள் பிறையை பார்த்த மகிழ்ச்சியை உற்றார் - உறவினர் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ரமழான் முபாரக்.
வருடா வருடம் தலைப்பிறை விஷயத்தில் சற்று குழப்பம் வருவது சகஜமாக இருக்கின்றனது, இது இன்று நேற்று அல்ல, நான் சிறியவனாக இருந்த காலத்திலிருந்தே நடந்து வருகின்றது, காரணம் இயற்கையின் விளையாட்டில் ஒன்றான மேகங்களின் கூட்டங்கள்.
உலக புவியியல் விதிப்படி நமதூரில் நேற்றைய மறையும் நேரங்கள்.
சூரியன் மாலை 6.37மணி
சந்திரன் மாலை 7.35மணி.
இன்று மறையும் நேரங்கள்.
சூரியன் மாலை 6.37மணி.
சந்திரன் மாலை 8.08மணி..
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com