1. மரைக்கா பள்ளி
2. பெரிய ஜும்ஆ பள்ளி
3. பிலால் நகர் பள்ளி
4. கடற்கரைத் தெரு பள்ளி
5. A.J. பள்ளி
கடந்த 14-05-2014 அன்று அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று மாலை கீழ்க்கண்ட பள்ளிவாசல்களுக்கு ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தப்படும் 2 மேஜைகள் வழங்கப்பட்டது.
6. சுரைக்கா கொல்லை கலீபா உமர் ( ரலி ) மஸ்ஜீத்
7. ஆசாத் நகர் முஹைதீன் ஜும்மா பள்ளி
ரியாத்வாழ் அதிரை சகோதரர்கள் வழங்கிய 1 மேஜை, சவூதி தமாமில் வசிக்கும் முகைதீன் அவர்கள் வழங்கிய 1 மேஜை, ஆகக்கூடுதல் 2 மேஜைகள் இன்று வழங்கப்பட்டது. இதில் சுரைக்கா கொல்லை கலீபா உமர் ( ரலி ) மஸ்ஜீத் சார்பில் அப்துல் மாலிக் மரைக்காயர், ஆசாத் நகர் முஹைதீன் ஜும்மா பள்ளி சார்பில் அதிரை மைதீன், சேக்காதி. நெய்னாமலை ஆகியோர் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடமிருந்து பெற்றனர்.
இதைதொடர்ந்து ஹாஜா நகர், வண்டிபேட்டை, செட்டிதெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டர் வழங்கப்பட்டது. இதில் பைத்துல்மால் திருக்குர்ஆன் மாநாட்டில் பெயர் சொல்ல விரும்பாத அதிரை சகோதரர் வழங்கிய 1 தையல் இயந்திரம் மற்றும் பைத்துல்மால் சார்பில் மற்றுமொரு தையல் இயந்திரம் , கிரைண்டர் ஆகியன வழங்கப்பட்டது.
இதில் கணவனை இழந்த பயனாளி ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்க இருப்பதாகவும், தான் பெற்றுவந்த மாதாந்திர பென்சன் தொகைக்கு பதிலாக தையல் இயந்திரத்தை தமக்கு வழங்க விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தையல் இயந்திரம் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Masha Allaah... All will be succeed with Allaah's Grace.
ReplyDeleteமாஷா அல்லாஹ்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.